என்னால் சித்தார்த் அழுதுவிட்டார்.. கண்கள் வீங்கிடுச்சு.. என்ன அதிதி இப்படி சொல்லிட்டாங்க

சென்னை: சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் சில நாட்களூக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருப்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அதிதி ராவும் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக கூறப்பட்ட சூழலில் நிச்சயதார்த்தம் நடந்ததாக சித்தார்த் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இதுவரை இயக்கவில்லை. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்திருக்கிறார் அவர்.

Aditi Rao Open Talks about Siddharth Here are the details

ஓபன் டாக்: சித்தார்த்தை பொறுத்தவரை தனக்கு மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். குறிப்பாக அரசாங்கம் ஏதேனும் தவறு செய்தால் யாருக்கும் அஞ்சாமல் ட்வீட்டும் போடுவார். அப்படி அவர் பதிவு செய்திருந்த பல ட்வீட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்துவருகிறார் சித்தார்த்.

டக்கரும் கவிழ்ந்தது: திறமையான நடிகர் என்று பெயர் எடுத்தாலும் இதுவரை பெரிய ஹிட் எதுவும் கொடுக்காமல் இருக்கிறார் சித்தார்த். அவரது நடிப்பில் கடைசியாக டக்கர் என்ற படம் வெளியானது. கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சித்தார்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இந்தப் படமும் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. இதனையடுத்து இந்தியன் 2 படமானவது தனக்கு தேவையான வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

சித்தா: சூழல் இப்படி இருக்க அவர் சித்தா என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். நல்ல எதிர்பார்ப்புக்கிடையே வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை கொடுத்தனர். குறிப்பாக சித்தார்த்தின் கரியரிலேயே இந்தப் படம்தான் பெஸ்ட் படமாக அமைந்துவிட்டது எனவும் ரசிகர்கள் கூறினர். இதனால் சித்தார்த் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.

காதல்: இதற்கிடையே சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் அதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக புகைப்படத்தை பகிர்ந்து உறுதி செய்திருந்தார் சித்தார்த். விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

அதிதி பேட்டி: இதற்கிடையே சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார் அதிதி. அதனை சித்தார்த்தும் பார்த்திருக்கிறார். பிறகு அதுகுறித்து பேசிய அதிதி, "ஹீராமண்டி வெப் சீரிஸ் சித்தார்த்துக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அந்தத் தொடரை பார்த்து ரொம்பவே ஃபீல் செய்தார். பேச்சே வரவில்லை. சொல்லப்போனால் அவர் அழுது அவரது கண்கள் வீங்கிவிட்டன. எனக்கு சஞ்சய் லீலா பன்சாலியை பார்த்தே ஆக வேண்டும் என்று கேட்டார். நானும் சித்தார்த்தும் கலையை ரசிப்போம். விரும்பி நடித்துக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X