ரோஜா எடுத்த மணிரத்னத்திற்கு ரோஸ் கொடுத்த அதிதி ராவ் - கலாய்த்த மணிரத்னம்

சென்னை: நடிகை அதிதி ராவ் இயக்குநர் மணிரத்னத்துக்கு ரோஜா பூ கொடுத்து ப்ரபோஸ் செய்வது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதோடு அவரை பின் பக்கத்திலிருந்து அதிதி ராவ் கட்டி பிடித்து கொண்டிருக்கும் அறிய ஃபோட்டோக்களை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமா துறையில் மிக முக்கியமான இயக்குனர் மணிரத்னம். அவர் எத்தனையோ கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் வேறு ஒரு பரிமாணத்தில் படம் பிடித்த காமிரா பிரம்மா என்றெ சொல்லலாம். அவர் உருவாகும் பல கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் காலத்திற்கும் நிற்கும்.

Aditi Rao propose to Maniratnam the photo is viral on social networks

இவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது வளர்ந்து வரும் பல நடிகர் நடிகைகளுக்கும் ஒரு கனவு என்றே கூறலாம். அதே போல் இவரிடம் உதவி இயக்குநராக சேர எத்தனையோ இளைஞர்கள் தவம் கிடக்கின்றனர்.

இவரிடம் ஒரு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினால், நிச்சயம் சினிமாவில் நமக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று எத்தனையோ இளைஞர்கள் இவரிடம் சேர துடித்துக்கொண்டுள்ளனர் என்பது சினிமாவை அறிந்த அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவில் தொழில்நுட்பம் வளராத 1980களில் இவர் இயக்கிய அத்தனை படங்களிலும் திரைக்கதையிலும், ஒளிப்பதிவிலும் ஹாலிவுட் தரம் நிச்சயம் இருக்கும். இதற்கு சரியான உதாரணம் நாயகன், தளபதி, அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி (இதயத்தை திருடாதே), ரோஜா என சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை, தான் இயக்கும் படங்களில் எப்போதும் வித்தியாசங்களை புகுத்தி, 10 வருடங்களுக்கு பின்னால் வரும் விசயங்களை சிந்தித்து அதை முன்கூட்டியே படமாக இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம்.

மணிரத்னத்தின் தொழில் பக்தி என்பது அவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் என்பது மாதிரி வேற எதிலும் கவனம் செலுத்தமாட்டார். யாரிடமும் அதிக நெருக்கம் காட்டமாட்டார் என்பது சினிமா உலகம் அறிந்தது. அவருடைய நட்பு வட்டமும் மிகக்குறைவே.

இவர் சிரிப்பதை யாராவது பார்த்திருந்தால், பார்த்தவருக்கு அன்றைக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்று அர்த்தம். அந்த வகையில், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய இரண்டு படங்களில் நடித்தவர் நடிகை அதிதி ராவ்.

Aditi Rao propose to Maniratnam the photo is viral on social networks

இவர் மணிரத்னத்துக்கு ரோஜா பூ கொடுத்து ப்ரபோஸ் செய்வது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதே போல் அவரை பின்னால் இருந்து அதிதி ராவ் கட்டி பிடித்து கொண்டிருக்கும் அறிய ஃபோட்டோக்களை பார்த்து பலரும் ஆச்சிரியத்தில் உள்ளனர். இந்த ஃபோட்டோக்களை பார்த்த பலருக்கும் காதில் புகை வரத்தொடங்கியுள்ளது.

மணி சார் அன்பு கிடைத்தால், ஆசிர்வாதம் கிடைத்தால் கண்டிப்பாக மிக பெரிய வெற்றியின் அடையாளம் என்று பல வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் நினைக்கின்றன. அதிதி ராவ் இப்பொழுது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X