Aditi Shankar: அப்பா மாதிரிலாம் என்னால முடியாது... நான் இப்படித்தான்... அதிதி ஷங்கர் அதிரடி!
சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி, தமிழில் நாயகியாக நடித்து வருகிறார்.
கார்த்தியின் விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமான அதிதி, அடுத்து மாவீரனிலும் நடித்திருந்தார்.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்த அதிதி ஷங்கரின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என ரசிகர்கள் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், தனது ஆட்டியூட் குறித்து ட்ரோல் செய்திருந்த ரசிகருக்கு அதிதி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அப்பா மாதிரிலாம் இருக்க முடியாது: ஜென்டில்மேன் படத்தில் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், தற்போது கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக மாஸ் காட்டி வருகிறார். ஷங்கரைத் தொடர்ந்து தற்போது அவரது மகள் அதிதி நடிகையாக சினிமாவில் களமிறங்கியுள்ளார். கடந்தாண்டு வெளியான விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து ரசிகர்களை சிலிர்க்க வைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார் அதிதி. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த மாவீரனில், நிலா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஆனாலும் அவரது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என நெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர். ஹீரோவின் காதலியாகவும், அவருக்கு உற்சாகம் கொடுக்கும் பூஸ்டராகவும் சும்மா வந்து போவதாக விமர்சனம் செய்திருந்தனர்.
இன்னும் சொல்லப்போனால் அதிதியை விடவும் யோகி பாபு, மிஷ்கின், சரிதா ஆகியோரின் பாத்திரங்கள் கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததாக கூறியிருந்தனர். இந்நிலையில், விருமன் இசை வெளியீட்டு விழாவின் போது அதிதி கடி ஜோக் அடித்தது வைரலானது. அதேபோல், மாவீரன் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் அதிதியை கடி ஜோக் சொல்ல வைத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அவரை கலாய்த்தனர்.
இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் அதிதியின் பேட்டியை கலாய்த்ததோடு, எப்போதுமே அவர் Cringe ஆக பேசுவதாக கமெண்ட் செய்திருந்தார். மேலும், அதிதியின் அப்பா ஷங்கர் போல் மெச்சூரிட்டியாக இல்லை என்றும் கிண்டல் செய்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுத்துள்ள அதிதி, "என் அப்பா வயசு என்ன, என் வயசு என்ன. அப்பா அவரது வயதுக்கேற்ற மெச்சூரிட்டியுடன் இருப்பார், ஆனால் நான் இப்படித்தான் இருப்பேன், இதுதான் என் இயல்பு என" கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











