Aditi Shankar: சூர்யா 43ல் இணையும் அதிதி சங்கர்... திடீர்ன்னு சான்ஸ் கிடைக்க இதுதான் காரணமா..?

சென்னை: சூர்யாவின் கங்குவா ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கும் தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஸிம், துல்கர் சல்மான் நடிக்கவுள்ள நிலையில், தற்போது அதிதி சங்கரும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்..?
கோலிவுட்டின் பிரம்மாண்டமான இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் வில்லேஜ் கெட்டப்பில் கலக்கிய அதிதி, அடுத்து மாவீரனில் சிவகார்த்தியனுடன் நடித்திருந்தார். கிளாமர் பக்கம் செல்லாமல் குடும்ப குத்து விளக்காக வலம் வரும் அதிதிக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

 Aditi Shankar: Aditi Shankar is confirmed to act in Suriya 43

அதேபோல், அவரும் திருமணமான நடிகர்களின் படங்களில் மட்டுமே கமிட்டாகி வருகிறாராம். இந்நிலையில், கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்ட சூர்யா, அடுத்து சுதா கொங்கராவுடன் இணைகிறார். சூர்யா 43 என தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, டைட்டிலின் ஒரு பகுதியாக புறநானூறு மட்டும் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஷூட்டிங் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்கவுள்ளது.

சூர்யா 43 படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம், பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோர் ஏற்கனவே கமிட்டாகிவிட்டனர். சூர்யா, துல்கர் சல்மான் இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிப்பதாகவும், 1960களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியாகவும் வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார் சுதா கொங்கரா. இந்நிலையில், சூர்யா 43 படத்தில் அதிதி ஷங்கரும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அதிதி ஷங்கர் தான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. நஸ்ரியா சூர்யாவுடன் நடித்தாலும் அதிதி தான் ஜோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கார்த்தியை தொடர்ந்து அண்ணன் சூர்யாவுக்கும் ஜோடியாகிறார் அதிதி. சூர்யா 43, வாடிவாசல் படங்களைத் தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வேள்பாரி நாவலை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படமாக்க வேண்டும் என சூர்யாவும் ஷங்கரும் முடிவு செய்துள்ளனர். அதனால், இந்த ப்ராஜெக்ட்டை மனதில் வைத்தே சூர்யா 43 படத்தில் அதிதி ஷங்கருக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X