Aditi Shankar: ஐயோ பாவம் அதிதி ஷங்கர்... மாவீரன்ல யோகி பாபு, மிஷ்கின் கூட கலக்கிருக்காங்க!
சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
விருமன் படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்திருந்த அதிதி சங்கருக்கு மாவீரன் தான் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், அதிக எதிர்பார்ப்பில் இருந்த அதிதிக்கு மாவீரன் பெரும் ஏமாற்றம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
plஐயோ பாவம் அதிதி ஷங்கர்:ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மாவீரன் திரைப்படம் இன்று (ஜூலை 14) வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான இப்படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
கடந்தாண்டு வெளியான விருமன் படத்தில், கார்த்தியின் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் அதிதி. இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளம் அதிதிக்கு ப்ளஸ்ஸாக அமைந்தது. முதல் படத்தில் கிராமத்து நாயகியாக கலக்கிய அதிதி சங்கருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. நடிகையாக மட்டும் இல்லாமல், பாடகியாகவும் கவனம் ஈர்த்திருந்தார்.

அதிதிக்கு தனது இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மாவீரன் படத்தில் அதிதி ஷங்கர் கமிட்டானதும் அவரது கேரக்டர் குறித்து அதிகம் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று வெளியான மாவீரன் படம் அதிதி ஷங்கருக்கு ஏமாற்றமே கொடுத்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடி என்றாலும், அவரது கேரக்டர் ரசிகர்களிடம் எந்த வரவேற்பையும் பெறவில்லை. நிலா என்ற கேரக்டரில் நடித்துள்ள அதிதிக்கு முக்கியத்துவம் இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
ஹீரோவின் காதலியாகவும், அவர் சோர்ந்து கிடக்கும் போது உற்சாகம் கொடுக்கும் பூஸ்டராகவும் தான் வந்துபோயுள்ளார். இன்னும் சொல்லப்போனால் அதிதியை விடவும் யோகி பாபு, மிஷ்கின், சரிதா ஆகியோரின் பாத்திரங்கள் கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. சில காட்சிகளில் மட்டுமே நடித்துள்ள அதிதி, கதையில் எந்த மாற்றாத்துக்கும் சப்போர்ட்டாக இல்லையென விமர்சித்துள்ளனர்.

பேட்ச் ஒர்க் பண்ணும் கூலித் தொழிலாளியாக நடித்துள்ள யோகி பாபுவின் கேரக்டர் கூட நல்ல ரீச் ஆகியுள்ளதாம். வட இந்திய தொழிலாளர்களால் பாதிக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளியாக நடித்துள்ளார். இந்தி தெரியும் என பொய் சொல்லி வேலையில் சேரும் போதும், மது அருந்திவிட்டு போதையில் சிவகார்த்திகேயனிடம் பேசும் காட்சிகளில் ரகளை செய்துள்ளார்.
அதேபோல் அமைச்சர் ஜெயக்கொடி கேரக்டரில் இயக்குநர் மிஷ்கினும் அசத்தியுள்ளார். அவருடன் சைலண்டாக வரும் சுனில், திடீரென வில்லனாக மிரட்டுவதும் படத்துக்கு பாசிட்டிவாக அமைந்தது. அதேபோல், சிவகார்த்திகேயனின் அம்மா கேரக்டர் சரிதா, தங்கையாக நடித்த மோனிஷா ஆகியோரின் கேரக்டருக்குக் கூட முக்கியத்துவம் உள்ளன. ஆனால், அதிதி ஷங்கருக்கு கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











