அப்பா படத்துல நடிக்கத்தான் சான்ஸ் கிடைக்கல.. இந்த வாய்ப்பாவது கிடைச்சுதே.. அதிதி ஷங்கர் ஆறுதல்!
சென்னை: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் ஜூன் 1ம் தேதி இரவு நடைபெற்றது. மாலை 3 மணிக்கு ஆரம்பம் என சொல்லிவிட்டு நிகழ்ச்சியே 7 மணிக்குத்தான் ஆரம்பித்தது. நடிகர் சிம்பு 10 மணிக்கு மேல் வர நிகழ்ச்சி முடிய 1 மணி ஆகிவிட்டது என்கின்றனர்.
கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வரும் சிம்பு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அனிருத் இசையில் வெளியான கதறல்ஸ் பாடல் தான் நேரு ஸ்டேடியத்தை அதிர விட்டது.

மாலை நடைபெற்ற ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் அதிதி ஷங்கர் மைக் பிடித்து பேசும் போது அவரிடமே சிலர் தண்ணீர் கேட்டனர். ஆனால், தனக்கே தண்ணீர் தரவில்லை என தண்ணி காட்டி சென்று விட்டார்.
ஆடியோ லான்ச்: இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில், அனைத்துப் பாடல்களும் வெளியாகிவிட்டன. அனிருத் லைவாக தனது டீமுடன் மேடையில் கம்பேக் இந்தியன், கதறல்ஸ் உள்ளிட்ட பாடல்களை பாடி பர்ஃபார்ம் செய்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். ஷங்கர் பேசும் போது அனிருத் 6 சூப்பரான பாடல்களை போட்டுள்ளார் என்றார். இந்தியன் 3 படத்துக்கு தனியாக அனிருத் ஆல்பம் போடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிதி ஷங்கர் ஆட்டம்: இந்தியன் 2 இசை வெளியிட்டு விழாவில் அதிதி ஷங்கர் கண்கவர் உடையை அணிந்து கொண்டு பாடல் ஒன்றுக்கு நடனமாடினார். ஊர்வசி ரவுத்தேலா, மெளனி ராய் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் ஒவ்வொரு பாடலுக்கும் நடனமாட படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் நடனமாடியது போல தெரியவில்லை. பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் வெளிநாட்டில் ஜாலி டூர் அடித்து வருகிறார் சித்தார்த் அதிதி ராவுடன் சென்றதை போல.
இதாவது கிடைச்சுதே: நடிகை அதிதி ஷங்கரின் அடுத்த படம் எப்போது என்கிற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் எழுப்ப இது இந்தியன் 2 நிகழ்ச்சியில் இந்தியன் 2 படத்தை பற்றி மட்டுமே பேசுவோம். இன்னொரு நாள் உங்களுக்கு நிறைய அப்டேட்களை கொடுக்கிறேன் என்றார். அப்பா ஷங்கர் படத்தில் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என்கிற கேள்விக்கு, அது அப்பா கையில் தான் உள்ளது. எனக்கான ரோல் இருந்தால் நிச்சயம் கொடுப்பார். அதற்காக நான் அடம்பிடிக்க மாட்டேன் என்றார். இந்நிலையில், இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் அதிதி ஷங்கர் நடனமாடிய புகைப்படங்களை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஷங்கர் மகன் டான்ஸ்: அக்கா ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் ரன்வீர் சிங்குடன் நடனமாடிய ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அனிருத் பாடல் பாட அவருடன் இணைந்து கதறல்ஸ் பாடலுக்கு வேறலெவல் குத்தாட்டம் போட்டார். அடுத்த வாரிசு நடிகர் ஷங்கர் வீட்டில் ரெடியாகி வருகிறார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என்று ரசிகர்கள் அர்ஜித் ஷங்கர் நடன வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.
டிரெய்லர் எப்போ?: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பாடல்கள் மட்டுமே வெளியாகின. கதற விடுறோம் பாட்டுக்கு லிரிக் வீடியோ வெளியிட்டு இருக்கலாம். இந்தியன் 2 டீசர் விட்டு இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கும். அடுத்த மாதம் படம் வெளியாக உள்ள நிலையில், விரைவில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











