இருட்டு அறையில் முரட்டு முத்தம்.. அதிதி ஷங்கரா இப்படி?.. விஜய் பட டைட்டிலில் இப்படியொரு படமா?

சென்னை: லவ் டுடே படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ஒன்ஸ்மோர் படத்திலும் புதிய படம் உருவாகியுள்ளது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதிதி ஷங்கர் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர். இளமை துள்ளலாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.

aditi shankar arjun das once more

இரண்டு படங்களிலும் ரொம்பவே பவ்யமாக நடித்து வந்த அதிதி ஷங்கர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி மற்றும் அர்ஜுன் தாஸ் என தற்போது காதல் பறவையாக மாறி ரசிகர்களை ஷாக் ஆக்கும் அளவுக்கு காட்சிகளில் நடித்து வருகிறார்.

விஜய் பட டைட்டில்: ரஜினிகாந்த் படத்தின் டைட்டிலை வைத்து பல புதிய படங்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வெளியாகி விட்டது. இந்நிலையில், அடுத்த டிரெண்டாக விஜய் நடித்த படங்களின் டைட்டிலை எல்லாம் புது இயக்குநர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய படத்துக்கு லவ் டுடே டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்துள்ள படத்துக்கு ஒன்ஸ் மோர் என மீண்டும் விஜய் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

aditi shankar arjun das once more

ஆளே மாறிய அதிதி ஷங்கர்: இனிமேலும், ஹோம்லி லுக்கில் நல்ல பொண்ணாக நடித்தால் எல்லாம் சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வர முடியாது என நினைத்த அதிதி ஷங்கர் இறங்கி நடிக்க ஆரம்பித்துள்ளார். காதல் படங்களை குறிவைத்து அடுத்தடுத்து அவர் நடித்து வருவதை பார்த்தால் கோலிவுட்டில் ஸ்ட்ராங்காக ஒரு ஹீரோயின் அந்தஸ்த்தை பிடித்து விடுவார் என்றே தெரிகிறது.

இளையாராஜா பிடிக்குமா? ஏ.ஆர். ரஹ்மான் பிடிக்குமா?: இளையாராஜா பிடிக்குமா? ஏ.ஆர். ரஹ்மான் பிடிக்குமா? என டீசரில் அதிதி ஷங்கர் கேள்வி எழுப்ப ஹாரிஷ் ஜெயரஜ் என தக் லைஃப் பதில் அளிக்கும் அர்ஜுன் தாஸ் ஷங்கர் பிடிக்குமா? மணிரத்னம் பிடிக்குமா? என்கிற கேள்விக்கு பாலசந்தர் என ஷங்கர் மகளிடமே சொல்லும் வசனங்கள் எல்லாமே டீசரை பார்த்தாலே செம ஃபிரெஷ்ஷாக படம் இருக்கும் என்கிற உணர்வை கடத்துகிறது.

இருட்டறையில் முரட்டு முத்தம்: அதிதி ஷங்கரை எந்தளவுக்கு அழகான ஹீரோயினாக காட்ட முடியுமோ அந்தளவுக்கு இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் வொர்க் செய்திருப்பது தெரிகிறது. டீசரின் நடுவே பிட்டு சொருகியது போல அதிதி ஷங்கர் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள முத்தக் காட்சியை பார்த்தால் அதிதி ஷங்கர் அதற்குள் லிப் லாக் காட்சியில் நடிக்க ஆரம்பித்து விட்டாரா என்கிற அதிர்ச்சிக்கு ரசிகர்கள் சென்று விடுவார்கள். காதல் படத்தில் நடிக்க வந்து விட்டால் இதெல்லாம் சாதாரணம் பாஸ் விஜய், த்ரிஷா லிப் லாக் அடித்து நடிக்கவில்லையா? என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் வெளியீடு: கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் டீசரை தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். கூலி ஷூட்டிங் பிரேக்கில் இருப்பதால் சில புரமோஷன் வேலைகளில் பிசியாகி விட்டார் என்று தான் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X