Aditi Shankar: திருமணமான நடிகர்களையே தேர்வு செய்யும் அதிதி ஷங்கர்.. அடுத்த ஜோடி யாரு தெரியுமா?

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இனிமேல் ஒரு படத்தை முடித்து விட்டு இன்னொரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற நினைப்பை எல்லாம் விட்டு விட்டு ஒரே நேரத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது தமிழில் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணின் கேம் சேஞ்சர் என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்து வருகிறார்.

 Aditi Shankar chooses only married actors movies?

அப்பா ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் நிலையில், பொண்ணு மட்டும் சும்மா இருப்பாரா? அவரும் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கப் போறாராம். அதிலும், திருமணமான நடிகர்களை மட்டுமே தேர்வு செய்து அதிதி ஷங்கர் நடித்து வருவது தான் கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சாக மாறி உள்ளது.

நடிப்பில் அசத்தும் அதிதி ஷங்கர்: மருத்துவப் படிப்பை படித்து முடித்து விட்டு கோலிவுட்டில் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக கடந்த ஆண்டு அறிமுகமானார் அதிதி ஷங்கர்.

முதல் படத்திலேயே கிராமத்துப் பெண்ணாக தேன் எனும் கதாபாத்திரத்தில் செம போல்டாக நடித்து ஸ்கோர் செய்த அதிதி ஷங்கர் அறிமுக நாயகிக்கான விருதுகளையும் பல விருது மேடைகளில் அள்ளி வருகிறார்.

 Aditi Shankar chooses only married actors movies?

சிவகார்த்திகேயன் ஜோடி: கார்த்தி உடன் விருமன் படத்தில் அறிமுகமான அதிதி ஷங்கர் அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியான நிலையில், சுடிதார் அணிந்து கொண்டு அதிதி ஷங்கர் நடித்துள்ள காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. ஆகஸ்ட் 11ம் தேதி அந்த படம் தியேட்டரில் வெளியாக உள்ளது.

 Aditi Shankar chooses only married actors movies?

விஷ்ணு விஷால் படத்தில்: மாவீரன் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்த நிலையில், அடுத்ததாக விஷ்ணு விஷால் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் விஷ்ணு விஷால் நடித்து வரும் லால் சலாம் படத்தில் ஜோடியாக நடிக்கப் போகிறாரா? அல்லது ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தில் ஜோடியாகப் போகிறாரா என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர்.

 Aditi Shankar chooses only married actors movies?

அதர்வா தம்பியுடன்: அஜித் படத்தை இயக்குவார் விஷ்ணுவர்தன் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹீரோவாக அறிமுகமாக உள்ள அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி படத்தை இயக்குகிறார்.

சேவியர் பிரிட்டோவின் மகளை திருமணம் செய்துக் கொண்ட ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 Aditi Shankar chooses only married actors movies?

திருமணமான நடிகர்களுடன்: இளம் நடிகையாக அறிமுகமாகி உள்ள அதிதி ஷங்கர் தொடர்ந்து உஷாராக திருமணம் ஆன நடிகர்களுடனே ஜோடிப் போட்டு நடித்து வருகிறார் என்றும் பேச்சுலர் நடிகர்களுடன் நடித்தால் தேவையில்லாமல் கிசுகிசுக்கள் எழும் என்பதால், அதை தவிர்க்கவே பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்து வருகிறார் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் மற்றும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் என திருமணமான நடிகர்களையே தேர்வு செய்து அதிதி ஷங்கர் நடித்து வருகிறார் என்றும் அதர்வாவுக்கு கிடைக்காத வாய்ப்பு அவரது தம்பிக்கு கிடைக்க காரணமும் இதுதான் என்கின்றனர். சிம்பு படத்தை வேண்டாம் என அதிதி ஷங்கர் சொன்னதற்கு காரணமே இந்த மேட்டர் தான் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X