அஜித் பட இயக்குநருடன் இணையும் அதிதி ஷங்கர்... இது கொஞ்சம் புது காம்போவா இருக்கே!

சென்னை: கார்த்தியின் விருமன் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர்.

விருமனைத் தொடர்ந்து மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் ஹீரோ, இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விருமன் தேன்மொழி

விருமன் தேன்மொழி

இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி கார்த்தியின் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஷங்கர் இயக்கிய 'முதல்வன்' படத்தில் மனிஷா கொய்ராலாவின் பாத்திரத்தின் பெயர் தேன்மொழி, அதேபெயரில் அவரது மகள் அதிதி விருமனில் நடித்திருந்தார். முத்தையா இயக்கத்தில் கிராமத்துப் பின்னணியில் உருவான விருமன், அதிதிக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்துள்ளது. விருமன் படம் மூலம் அதிதி ஷங்கருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

மாவீரனில் அதிதி

மாவீரனில் அதிதி

விருமனில் கிடைத்த நல்ல அறிமுகத்தால், சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார் அதிதி. இந்தப் படம் மூலம் அவர் தெலுங்கிலும் அடியெடுத்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் மாவீரன், அடுத்தாண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பின்னர் அதிதி ஷங்கருக்கு இன்னும் தரமான வாய்ப்புகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், அதிதி ஷங்கரின் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

அஜித் பட இயக்குநருடன் கூட்டணி

அஜித் பட இயக்குநருடன் கூட்டணி

'மாவீரன்' படத்தில் கமிட் ஆனபோதே, 'கொரோனா குமார்' திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், கொரோனா குமார் டிராப் ஆனதால், அதிதியின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், விஷ்ணுவர்த்தன் இயக்கும் புதிய படத்தில் அதிதி லீட் ரோல் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. அறிந்தும் அறியாமலும், அஜித்துடன் பில்லா, ஆரம்பம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள விஷ்ணுவர்த்தன், சமீபத்தில் இந்தியில் 'ஷெர்ஷா' படத்தை இயக்கியிருந்தார்.

அதிதியின் ஹீரோ இவரா?

அதிதியின் ஹீரோ இவரா?

தனது ஃபேவரைட் ஹீரோ அஜித்துக்காக எழுத்தாளர் பாலகுமாரனோடு இணைந்து ஒரு வரலாற்றுக் கதையை எழுதி வைத்திருந்தார் விஷ்ணுவர்த்தன். ஆனால் அந்தப் படம் அப்படியே டிராப் ஆனதால், அதர்வாவின் தம்பி ஆகாஷை ஹீரோவாக்கி ஒரு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் தான் ஆகாஷ்க்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருமன் மூலம் ரசிகர்களிடம் செம்மையாக ரீச்சான அதிதிக்கு மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X