Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
ஷங்கர் மகளை ஜோடியாக்கிய சிவகார்த்திகேயன்.. அப்போ கியாரா அத்வானி கிடையாதா? எந்த படத்தில் தெரியுமா?
சென்னை: நடிகர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ள அதிதி ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி உள்ள விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் எந்த படத்தில் நடிக்க உள்ளார் என்கிற படு மாஸான அப்டேட் தற்போது வெளியாகி டிரெண்டிங்கை தெறிக்க விட்டு வருகிறது.
இப்படி
ஒப்பாரி
வைக்க
அதுதான்
காரணமா?
பாடகரை
அவர்
மட்டுமல்ல
ஒட்டுமொத்தமாக
ஒதுக்கி
விட்டார்களா?

இயக்குநர் ஷங்கரின் பொண்ணு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை படித்து வந்தாலும், அப்பாவின் படங்களை பார்த்து வளர்ந்ததன் காரணமாக தானும் ஹீரோயினாக வேண்டும் என ஆசைப்பட்டார். உடனடியாக சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தனர். அவர் அறிமுகமாகவுள்ள விருமன் படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகிறது.

சிம்புன்னு சொன்னாங்க
கார்த்தியின் விருமன் படத்தை முடித்து விட்டு சிம்புவுடன் கொரோனா குமார் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷஙகர் நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், கொரோனா குமார் படத்துக்கே சிம்பு குட்பை சொல்லி விட்டதாகவும், அதனால், சிம்புவுக்கு பதில் சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி விட்டார் அதிதி ஷங்கர் என்கிற ஹாட் அப்டேட் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி
கார்த்தியை தொடர்ந்து அடுத்ததாக கோலிவுட்டின் இளம் பாக்ஸ் ஆபிஸ் கிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாறி உள்ளார் நடிகை அதிதி ஷங்கர். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ஒட்டுமொத்த சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அப்படி அவர் எந்த படத்தில் தெரியுமா? சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்துள்ளார் என பார்க்கலாம் வாங்க..

மாவீரனின் மனைவி
மண்டேலா படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார். சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் பூஜை இன்று போடப்பட்ட நிலையில், சாந்தி டாக்கீஸ் அதிதி ஷங்கர் ஆன்போர்ட் ஆகி உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கியாரா கிடையாதா?
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் சமந்தா ஜோடி சேரப் போகிறார் என்றும், சமந்தா இல்லைங்க பாலிவுட் பாப்பா கியாரா அத்வானி தான் ஹீரோயின் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க என்றெல்லாம் வந்த தகவல் அனைத்தும் தற்போது வதந்திகளாக மாறிவிட்டன. செம ஸ்பீடில் சூட்டிங் முடிந்து 2023 மார்ச் மாதம் மாவீரன் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள் ட்ரீட்
அதிதி ஷங்கர் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட் காத்துக் கிடக்கின்றன. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி இவர் தான் என அறிவிக்கப்பட்ட நிலையில், விருமன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் இன்று பிரம்மாண்டமாக அரங்கேற போகிறது. விருமன் டிரைலரில் அதிதி ஷங்கரின் அட்டகாசமான நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.