ஷங்கரின் ’ஜீன்’ என்றால் சும்மாவா?.. விருமன் படத்தில் இறங்கி குத்திய அதிதி ஷங்கர்.. ரசிகர்கள் குஷி!
சென்னை: ஜீன்ஸ் படத்தை இயக்கிய ஷங்கர் சாரின் ஜீன்னா சும்மாவா என அதிதி ஷங்கரின் அறிமுகத்தை விருமன் படத்தில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தேனாக முதல் படத்தில் நடிக்கிறோம் என்பதே தெரியாமல் அதிதி ஷங்கர் நடித்திருப்பதை பார்த்து, இவங்க டாக்டருக்குத்தான் படிச்சாங்களா? இல்லை அப்பா படங்களை மட்டுமே பார்த்து வளர்ந்தாங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கார்த்தியின் துள்ளலான நடிப்புக்கு அப்படியே ஈடு கொடுத்து அசத்தி இருக்கிறார் அதிதி ஷங்கர் என #AditiShankar ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஷங்கர் ஜீன்
இயக்குநர் ஷங்கரின் ஜீன்னா சும்மாவா என்றும், அதிதி ஷங்கர் விருமன் படத்தில் மிரட்டி எடுத்து அப்பாவின் பெயரை காப்பாற்றி விட்டார் என இந்திரஜா சங்கர் உடன் அதிதி ஷங்கர் குத்தாட்டம் போடும் விருமன் படத்தின் வீடியோ காட்சியை ஷேர் செய்து ரசிகர்கள் அதிதி ஷங்கரை கோலிவுட்டுக்கு அன்போடு வரவேற்றுள்ளனர்.

டிரெண்டிங் தெறிக்குது
முத்தையா இயக்கத்தில் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் அதிதி ஷங்கர் அறிமுகமாகி உள்ள நிலையில், வெள்ளை நிற சேலையில் முதல் முதலாக போட்டோக்களை போடுகிறேன் என அவர் பதிவிட டிரெண்டிங் தீப்பிடித்துக் கொண்டது. தேன் எனும் கதாபாத்திரத்தில் தெனாவட்டுக்கு குறைவில்லாத மதுரைக்காரப் பெண்ணாக நடித்து தியேட்டரை தெறிக்கவிட்டுள்ளார் அதிதி ஷங்கர்.

ஐஸ்வர்யா ராயை அழிக்க வந்தவளே
அதிதி ஷங்கரின் ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்ற நிலையில், ஐஸ்வர்யா ராயை அழிக்க வந்தவளே, சாய் பல்லவியை சாய்க்க வந்தவளே, நயன்தாராவை நசுக்க வந்தவளே, ஷங்கர் பெத்த ஸ்கார்லெட் ஜான்சனே என வர்ணித்து உள்ளனர்.

கார்த்தியுடன் லிப் கிஸ்
அண்ணன் சூர்யா மாற்றான் படத்தில் காஜல் அகர்வால் உடன் லிப் கிஸ் காட்சியில் நடிக்க சிஜியை எல்லாம் பயன்படுத்திய நிலையில், கார்த்திக்கு அதிதி ஷங்கர் தனது முதல் படத்திலேயே லிப் கிஸ் அடித்திருப்பதை திரையில் பார்த்ததும் ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர். இந்த பாப்பா இவ்ளோ ஃபயரா இருக்கே என்றும் அடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரனில் எப்படி மிரட்டப் போகுதோ என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











