ஹேப்பி பர்த்டே அப்பா.. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள்.. அதிதியின் சூப்பர் வாழ்த்து!
சென்னை: விருமன், மாவீரன் படங்களின் ஹீரோயின் அதிதி ஷங்கர் தனது அப்பா இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளுக்கு சூப்பரான வாழ்த்து ஒன்றை சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, அந்நியன், எந்திரன், ஐ, 2.0 உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்காக இயக்கி இந்திய திரையுலகையே கோலிவுட் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

கமலுடன் இந்தியன் 2, ராம்சரணுடன் கேம் சேஞ்சர் என பேக் டு பேக் இரு பெரிய படங்களை கொடுத்து சினிமா ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் மோடுக்கு கொண்டு செல்ல காத்திருக்கிறார்.
ஷங்கருக்கு 60 வயசு: 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி கும்பகோணத்தில் பிறந்த ஷங்கர் தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இயக்குநர் ஷங்கர் இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், சினிமா பிரபலங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே அப்பா: இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் கடந்த ஆண்டு கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திலும் சப் எடிட்டர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
தனது அப்பா இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பாவுடன் பனி பிரதேசத்தில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்து "ஹேப்பி பர்த்டே அப்பா" என சூப்பராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகளுடன் ஹேப்பியாக: இயக்குநர் ஷங்கருக்கு அதிதி, ஐஸ்வர்யா, அர்ஜித் என 3 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளை திருமணம் செய்து வைத்த நிலையில், மருத்துவப் படிப்பை முடித்த இளைய மகள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார்.
தனது செல்ல மகள் அதிதி ஷங்கருடன் செம ஹேப்பியாக ஷங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களை தொடர்ந்து இந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து அடுத்ததாக ஷங்கர் படம் எடுக்கப் போகிறாரா? அல்லது தமிழில் வேள்பாரி படத்தை பிரம்மாண்டமாக இயக்கப் போகிறாரா என்கிற எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.


Click it and Unblock the Notifications











