பிரதீப் ரங்கநாதனுடன் நடிக்க மறுத்த வாரிசு நடிகை... இதுல நயன்தாரா தான் பெஸ்ட்!

சென்னை: லவ் டுடே திரைப்படம் மெஹா ஹிட் அடித்ததால் பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட்டில் அடை மழை அடித்து வருகிறது.

பிரதீப் ரங்கநாதனே இயக்கி அவரே ஹீரோவாக நடித்த இந்தப் படம் 5 பட்ஜெட்டில் உருவாகி 150 கோடி வரை வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கவிருந்த கொரோனா குமார் படத்தில் பிரதீப் ஹீரோவாக நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடன் ஜோடியாக நடிக்கவிருந்த அதிதி ஷங்கர் தற்போது பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க தயங்குவதாக சொல்லப்படுகிறது.

 லவ் டுடே பிரதீப்

லவ் டுடே பிரதீப்

கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். அவரது இரண்டாவது படமான லவ் டுடே கடந்தாண்டு வெளியானது. இதில் அவரே ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் இசையமைத்த இந்தப் படம் 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி 150 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

 கொரோனா குமார்

கொரோனா குமார்

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் மாஸ் காட்டிய லவ் டுடே தற்போது இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது. இன்னொரு பக்கம் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன. ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருந்த படம் கொரோனா குமார். இதற்குதானே ஆசைப்பட்டாய் புகழ் கோகுல் இயக்குநராக கமிட் ஆன இந்தப் படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டார். சிம்பு கேட்ட சம்பளத்துக்கு ஐசரி கணேஷ் நோ சொல்லிவிட்டதால் தான் இந்தப் படம் இன்னும் டேக் ஆஃப் ஆகவில்லை. தற்போது கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு பதிலாக பிரதீப் நடிக்க உள்ளாராம்.

 அதிதி ஷங்கர் தயக்கம்

அதிதி ஷங்கர் தயக்கம்

விருமன் படம் மூலம் கார்த்தி ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா குமார் படத்தில் சிம்புவுடனும் இணைந்து நடிக்கும் ஆசையில் இருந்தார் அதிதி. ஆனால், சிம்பு அந்தப் படத்தில் இருந்து விலகியதால் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறாராம். அதேநேரம் இப்போது பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கவிருப்பதால் கொரோனா குமார் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க அதிதி ஷங்கர் தயக்கம் காட்டி வருகிறாராம்.

 நயன் தான் பெஸ்ட்

நயன் தான் பெஸ்ட்

கொரோனா குமார் படத்தில் இருந்து விலகினால் அது தனது கேரியரில் நெகட்டிங் ஷேடாக இருக்கும் என பயப்படுகிறாராம் அதிதி. ஆனாலும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் இல்லை என்றே தெரிகிறது. இந்நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தை தவறவிட்ட விக்னேஷ் சிவன், பிரதீப்பை வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்துள்ளார். அதில் நயன் நாயகியாக நடிக்கவுள்ளார். விக்னேஷ் சிவனுக்காக தனது இமேஜ்ஜை பார்க்காமல் பிரதீப்புடன் நடிக்க ரெடியாகிவிட்டார். ஆனால், அதிதி இப்படி தயக்கம் காட்டுவது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மீண்டும் லவ் டுடே கூட்டணி

மீண்டும் லவ் டுடே கூட்டணி

இதனிடையே பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒரு படம் இயக்கி ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். அதில் அவருக்கு ஜோடியாக இவானா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக யுவன் இசையில் மீண்டும் இணைகிறதாம் லவ் டுடே காம்போ. இந்தப் படமும் லவ் டுடே போன்று 2கே கிட்ஸ் ஃபேவரைட் ஜானராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X