வாவ்.. சிம்புவுக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

சென்னை: மாநாடு படத்தை பார்த்து விட்டு ஷங்கர் சிம்புவை அப்படி பாராட்டும் போதே ரசிகர்கள் சிம்பு மற்றும் ஷங்கர் காம்பினேஷனை எதிர்பார்த்தனர்.

ஆனால், ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் சிம்பு காம்பினேஷன் இவ்வளவு சீக்கிரத்தில் வரும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கார்த்தியின் விருமன் படத்தில் நடித்து வரும் அதிதி ஷங்கருக்கு அடுத்த படமும் கிடைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிம்புவின் வெர்ஷன் 2.0

சிம்புவின் வெர்ஷன் 2.0

தோல்வி முகத்தையே சந்தித்து வந்த நடிகர் சிம்பு தன்னை டோட்டலாக மாற்றிக் கொண்டு முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக வெர்ஷன் 2.0வாக களமிறங்கி உள்ளார். மாநாடு படம் 100 கோடி வசூலை ஈட்டி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் ஏகப்பட்ட படங்களில் புக் ஆகி வருகிறார்.

ஷங்கர் பாராட்டு

ஷங்கர் பாராட்டு

பெரும்பாலும் இயக்குநர் ஷங்கர் படங்களை பார்த்து வெளிப்படையாக பாராட்டுவது ஆச்சர்யம் தான். ஒரு சில படங்களுக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் கிடைக்கும். சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சிம்பு என மாநாடு படக்குழுவினரை மனதார பாராட்டி இருந்தார் இயக்குநர் ஷங்கர்.

ஷங்கர் இயக்கத்தில்

ஷங்கர் இயக்கத்தில்

நல்ல கதைகள் கிடைத்தால் சிம்பு வெளுத்துக் கட்டுவார். தெலுங்கு, இந்தி என சென்று கொண்டிருக்கும் ஷங்கர் சிம்புவுக்கும் ஒரு படம் பண்ணா வேற மாறி இருக்கும் என சிம்பு ரசிகர்கள் ஷங்கரின் பாராட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ஏக்க கமெண்ட்டுகளை போட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது வேற மாறி ஒரு காம்பினேஷன் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிம்புவுக்கு ஜோடியான ஷங்கர் மகள்

சிம்புவுக்கு ஜோடியான ஷங்கர் மகள்

இந்நிலையில், தற்போது சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கப் போவதாக அதிரடியான ஹாட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட உள்ளனர் என்றும் பட பூஜை ஒன்றும் பிரம்மாண்டமாக போடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எந்த படத்தில்

எந்த படத்தில்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் அவருக்கு ஹீரோயின் இருக்கிறாரா இல்லையா என்றே இன்னமும் தெரியவில்லை. அதனை தொடர்ந்து பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களும் சிம்புவின் கைவசம் உள்ளன. இதில், கொரோனா குமார் படத்தில் தான் அதிதி ஷங்கர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள கொரோனா குமார் படத்தில் அதிதி ஷங்கர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆக போகிறதாம்.

விரைவில் விருமன்

விரைவில் விருமன்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் அதிதி ஷங்கர் அறிமுக நடிகையாக நடித்து வரும் விருமன் படம் விரைவில் ரிலீசாகும் வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும் விருமன் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு அதிதி ஷங்கர் சிம்புவுடன் இணைந்து கொரோனா குமார் படத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக சிம்பு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

டாக்டர் பட்டம்

டாக்டர் பட்டம்

சமீபத்தில் அதிதி ஷங்கர் டாக்டர் படிப்பை முடித்து விட்டு பட்டம் பெற்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கினார். விருமன் படத்திற்கு பிறகு டாக்டர் பட்டம் கிடைத்ததால் கிளினிக்கிற்கு போவார் என எதிர்பார்த்த நிலையில், கொரோனா குமாரை குணப்படுத்த முடிவு செய்து விட்டார் போல என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X