Aditi Shankar Salary: சிவகார்த்திகேயன் ஜோடி... ஆனால் மாவீரனில் அதிதி ஷங்கர் சம்பளம் இவ்வளவு தானா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ள அதிதி ஷங்கருக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்காக அதிதி ஷங்கர் வாங்கிய சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மாவீரன் படத்திற்காக அதிதி ஷங்கர் சம்பளம்:சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. மண்டேலா படம் பிரபலமான மடோன் அஸ்வின், மாவீரனை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இயக்குநர் மடோன் அஸ்வினைப் போல அதிதி ஷங்கருக்கும் மாவீரன் தான் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஷங்கரின் மகளாக விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமானார் அதிதி. முத்தையா இயக்கிய விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார் அதிதி. முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக் கன்னியாக வசீகரித்த அதிதி, இரண்டாவது படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்தார். அதேபோல், இருவரும் இணைந்து இப்படத்தில் ஒரு பாடலையும் பாடி அசத்தியுள்ளனர்.
'வண்ணாரப்பேட்டை' எனத் தொடங்கும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்காக அதிதி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்காக 25 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம் அதிதி. முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தாலும் அதிதியின் சம்பளம் 25 லட்சம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விருமன், மாவீரன் படங்களில் அதிதிக்கு வாய்ப்புக் கிடைக்க அவரது அப்பா ஷங்கர் தான் காரணம் என செய்திகள் வெளியாகின. சில இளம் நடிகைகளும் அதிதி மீது விமர்சனம் செய்திருந்தனர். ஷங்கர் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதால், அதிதிக்கு பணமெல்லாம் ஒரு விஷயமே கிடையாதாம். அதனால் சம்பளத்தை பற்றி கவலைபடாமல் 25 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு மாவீரனில் நடித்துள்ளாராம்.
அதேபோல், மாவீரன் படத்திற்காக தனது சம்பளத்தில் 5 கோடி ரூபாய் குறைத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். அதன்படி ஒரு படத்துக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன், மாவீரனுக்காக 25 கோடி மட்டுமே வாங்கியுள்ளாராம். இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கும் 25 கோடி தான் சம்பளம் வாங்குவாரா இல்லையா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











