படமே இப்போ தான் போடுறாங்க.. அதுக்குள்ள எப்படி இருக்குன்னு கேட்குறீங்க.. கடுப்பான அதிதி ஷங்கர்!

சென்னை: கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கடந்த ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான அதிதி ஷங்கர் தனது இரண்டாவது படமான மாவீரன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை படித்தாலும், அப்பாவை போலவே சினிமா மீது இருக்கும் ஆர்வம் காரணமாக கடந்த ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக தேன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Aditi Shankar upset over youtuber questions at Maaveeran FDFS

விருமன் படத்தில் யுவன் இசையில் ஒரு பாடலை பாடியிருந்த அதிதி ஷங்கர் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பாடிய "வண்ணாரப்பேட்டையில" பாடல் வேறலெவல் ஹிட் அடித்தது.

ஷங்கர் மகள்: இந்திய சினிமாவையே தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் கார்த்தி நடித்து கடந்த ஆண்டு வெளியான முத்தையா இயக்கிய விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள மாவீரன் படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

Aditi Shankar upset over youtuber questions at Maaveeran FDFS

இரண்டாவது படம்: யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி உள்ள மாவீரன் படம் நடிகை அதிதி ஷங்கருக்கும் இரண்டாவது படம்.

முதல் படத்தில் சேலை கட்டி கிராமத்துப் பெண்ணாக ராவடி செய்த அதிதி ஷங்கர் இந்த படத்தில் சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமாக சிவகார்த்திகேயன் உடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தியேட்டருக்கு வந்த அதிதி ஷங்கர்: மாவீரன் படத்தை ரசிகர்களுடன் அந்த படத்தின் குழுவினர் பலரும் பார்த்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் ரோகிணி திரையரங்குக்கு சென்று மாவீரன் படத்தை பார்த்தார். நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் வெற்றி தியேட்டரில் மாவீரன் படத்தை பார்த்துள்ளார்.

நடிகை சரிதா உள்ளிட்ட பலரும் தியேட்டருக்கு சென்று மாவீரன் படத்தை பார்த்த நிலையில், நடிகை அதிதி ஷங்கரும் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் மாவீரன் படத்தை பார்த்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

Aditi Shankar upset over youtuber questions at Maaveeran FDFS

அதிதி ஷங்கர் டென்ஷன்: தியேட்டருக்கு வந்து ஆசையாக தான் நடித்த 2வது படத்தை பார்க்க சீட்டில் அமர்ந்த உடனே படம் எப்படி இருக்கு மேடம் என ஒரு யூடியூபர் மைக்கை நீட்ட, படமே இன்னும் போடல, படத்தை பாருங்க, என்ஜாய் பண்ணுங்க, ப்ளீ ஸ், கிளம்புங்க என்பது போல பேசிய வீடியோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

யூடியூபரின் கேள்வியால் கடுப்பான அதிதி ஷங்கர் அதை மறைத்தபடி சிரித்த முகத்துடன் அவரை பேசி அங்கிருந்து அனுப்பி உள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

விருமன் படம் வெளியான உடனே மாவீரன் படத்தில் கமிட்டான அதிதி ஷங்கர் அடுத்ததாக எந்த படத்தில் எந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. அதர்வாவின் தம்பி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்னமும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X