Aditi Shankar: ப்பா.. பிறந்தநாளை அதிதி ஷங்கர் எப்படி கொண்டாடி இருக்காரு பாருங்க.. சூப்பர் பிக்ஸ்!

சென்னை: இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கடந்த 6ம் தேதி தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் மாவீரன் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், பிறந்தநாளை தான் எப்படி ஜோராக கொண்டாடினேன் என அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பர்த்டே செலிபிரேஷன் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

கார்த்தியின் விருமன் படத்தில் அறிமுகமான அதிதி ஷங்கர் விரைவில் வெளியாக உள்ள மாவீரன் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்.

 Aditii Shankar shares her birthday celebration gorgeous photos

ஷங்கரின் இளைய மகள்: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை முடித்து பட்டம் வாங்கிய நிலையில், டாக்டர் ஆகாமல், அவங்க அப்பாவை போலவே சினிமா பக்கம் யூடர்ன் அடித்து வந்து விட்டார்.

தனது மகளின் ஆசைய நிறைவேற்ற நினைத்த ஷங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் அதிதி ஷங்கரை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.

 Aditii Shankar shares her birthday celebration gorgeous photos

மாவீரன் ஹீரோயின்: நடிப்பு, பாடல் என ஏகப்பட்ட திறமைகளை கொண்டுள்ள அதிதி ஷங்கர் மொக்கை ஜோக்குகள் சொல்வதிலும் செம ஸ்பெஷல். விருமன் படம் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக மாவீரன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக தேன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் பத்திரிகையில் வேலை செய்யும் நகரத்து பெண்ணாக நடித்துள்ளார்.

 Aditii Shankar shares her birthday celebration gorgeous photos

26வது பிறந்தநாள்: ஜூலை 6ம் தேதி 1997ம் ஆண்டு பிறந்த அதிதி ஷங்கர் தனது 26வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்நிலையில், பிறந்தநாள் செலிபிரேஷனில் எடுத்துக் கொண்ட அழகான போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்த பிறந்தநாள் தனக்கு ரொம்பவே சூப்பரான பிறந்தநாளாக இருந்தது என நடிகை அதிதி ஷங்கர் போஸ்ட் போட்டுள்ளார்.

 Aditii Shankar shares her birthday celebration gorgeous photos

செம அழகு: அதிதி ஷங்கர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டாலே இளைஞர்கள் மத்தியில் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அவர் பாடிய 'வண்ணாரப்பேட்டையில' பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு லைட் ஒயிட் கலர் கவுனில் அழகுச் சிலையாகவே மாறி இருந்தார் அதிதி ஷங்கர்.

மாளவிகா மோகனன் வாழ்த்து: அதிதி ஷங்கர் பிறந்தநாள் போட்டோக்களை வெளியிட்ட நிலையில், நடிகை மாளவிகா மோகனன் ஹேப்பி பர்த்டே என பதிவிட்டு வாழ்த்தி உள்ளார். சீனியர் நடிகை ராதிகா சரத்குமார், பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் உள்ளிட்ட பலரும் அதிதி ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்தி உள்ளனர். வரும் ஜூலை 14ம் தேதி வெளியாக உள்ள மாவீரன் அதிதி ஷங்கருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைய வாழ்த்துகள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X