உலகத்தின் சிறந்த அப்பா.. மகன் தனுஷுக்காக பில்லியனரை அழைத்துவந்த நெப்போலியன்.. யார் தெரியுமா?
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கு கடந்த வருடம் ஜப்பானில் வைத்து திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சுமூகமாக அவர்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க தனது மகன் யாரையெல்லாம் சந்திக்க விருப்பப்படுகிறாரோ அவர்களை எப்பாடு பட்டாவது வீட்டுக்கு அழைத்துவந்து சந்திக்க வைத்துவிடுகிறார் நெப்போலியன்.
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று தரமான நடிப்பை வெளிப்படுத்தியவர் நெப்போலியன். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகனான தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் அவரது சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று குடும்பத்தோடு செட்டிலாகிவிட்டார் நெப்போலியன். அங்கு விவசாயம், தொழில் உள்ளிட்டவைகளை செய்துவருகிறார்.
தனுஷுக்கு திருமணம்: தனது மூத்த மகன் தனுஷுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்த நெப்போலியன்; அக்ஷயா என்ற பெண்ணை பார்த்து அவரிடமும், அவரது குடும்பத்தினருடமும் பேசினார். அவர்களுக்கும் தனுஷை ரொம்பவே பிடித்துப்போக தமிழ்நாட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. அதற்கு பிறகு அமெரிக்காவில் திருமணத்தை நடத்த சில சட்ட சிக்கல்கள் எழுந்ததால் ஜப்பானில் வைத்து மகனின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி முடித்தார். அதில் ஏகப்பட்ட கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செயலால் பதிலடி கொடுக்கும் தனுஷ்: இந்தத் திருமணம் நடந்தபோது பலரும் பலவிதமாக பேசினார்கள். முக்கியமாக தனுஷுக்கு திருமணமே தேவையில்லை; அவருக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியனும், அவரது மனைவியும் சீரழிக்கிறார்கள் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் இதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாத தனுஷ்; இன்ஸ்டாவில் ஒரு பதிவை மட்டும் போட்டுவிட்டு; தனது மனைவியுடன் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
படையெடுக்கும் பிரபலங்கள்: இதற்கிடையே தனது மகன் யாரை பார்க்க வேண்டுமென்று ஆசைபட்டாலும் அதனை உடனடியாக நிறைவேற்றக்கூடியவர் நெப்போலியன். அந்தவகையில்தான் யூடியூபர் இர்ஃபானை ஒருமுறை சந்திக்க வைத்தார். அவரைத் தொடர்ந்து பலர் சந்தித்தனர். சமீபத்தில்கூட பிரபல யூடியூபர்களான பரிதாபங்கள் கோபி, சுதாகர்; நடிகரும், பிரபலமான சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளிட்டோர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது தனுஷை நேரில் சந்தித்து நலம் விசாரித்துவிட்டும்; திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டும் வந்தார்கள்.
இப்போது யார் தெரியுமா?: இந்நிலையில் தனது மகனுக்காக இன்னொரு பிரபலத்தை வீட்டுக்கு அழைத்துவந்திருக்கிறார் நெப்போலியன். அதாவது மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆதித்யா ராம் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓவான ஆதித்யா ராமைத்தான் தனது வீட்டுக்கு அழைத்து தனுஷை சந்திக்க வைத்திருக்கிறார். தனுஷை சந்தித்து நலம் விசாரித்த அவர், 'லவ் யூ சோ மச்' என்றும் கூறினார். மேலும் அந்த வீடியோவை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'உலகத்தின் மிகச்சிறந்த அப்பா நெப்போலியன்' எனவும் புகழ்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











