என்ன இது சின்னப்புள்ளத்தனமா.. மறுபடியும் மேடையில் கேஜிஎஃப் ஹீரோயினை மொக்கை பண்ணிய அதிவி சேஷ்!

ஹைதராபாத்: தெலுங்கில் ஹிட் படங்களின் சீரிஸ்க்கென்றே தனியாக ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது. சமீபத்தில் நானி நடிப்பில் ஹிட்: தி தேர்ட் கேஸ் என 3ம் பாகம் வெளியானது. அந்த படத்தில் ஹீரோயினாக கேஜிஎஃப் மற்றும் கோப்ரா படங்களில் நடித்த ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார். அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது ஹிட் 2ம் பாகத்தில் ஹீரோவாக நடித்திருந்த அதிவி சேஷ் மேடையில் ஸ்ரீனிதி ஷெட்டி கை கொடுக்க வந்தபோது அவரை மொக்கை பண்ணியது சோஷியல் மீடியாவில் வைரலானது.

இந்நிலையில், சமீபத்தில் ஹிட் 3ம் பாகத்தின் வெற்றி விழாவிலும் ஸ்ரீனி ஷெட்டி அருகே ஆத்வி சேஷை நடிகர் நானி மேடையேற்ற மீண்டும் ஸ்ரீனிதி ஷெட்டியுடன் குசும்புத்தனமாக அதிவி சேஷ் விளையாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

Adivi Sesh once again teases Srinidhi Shetty infront of Nani at the Hit 3 event

இருந்தாலும் ஸ்ரீனிதி ஷெட்டியை இப்படி பப்ளிக்கா அதுவும் விழா மேடையில் அதிவி சேஷ் வெறுப்பேற்றக் கூடாது என ரசிகர்கள் கேஜிஎஃப் மற்றும் ஹிட் 3 படங்களின் ஹீரோயினுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

ஹிட் 3 வசூல் எவ்வளவு?: மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழில் ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் வெளியான நிலையில், தெலுங்கில் நானி, ஸ்ரீனிதி ஷெட்டி நடிப்பில் ஹிட்: தி தேர்ட் கேஸ் படம் வெளியானது. அந்த படத்தில் கார்த்தி கேமியோ ரோலில் நடித்த நிலையில், 4வது பாகத்தில் அவர் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கின்றனர். இதுவரை இந்தியளவில் ஹிட் 3 படம் 65 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படக்குழு அதிகாரப்பூர்வமாக 103 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டியிருப்பதாக அறிவித்து ரெட்ரோ படத்துக்கு சூர்யா வைத்ததை போலவே சக்சஸ் மீட்டையும் நடத்தியுள்ளார் நானி.

Adivi Sesh once again teases Srinidhi Shetty infront of Nani at the Hit 3 event

மேடையில் நடிகையை கலாய்த்த அதிவி சேஷ்: டோலிவுட்டின் இளம் நடிகரான அதிவி சேஷ் ஹிட் 2 படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் ஹிட் 3 படத்தை விட ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருந்தது. ஹிட் 3 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி கை கொடுக்க வரும் போது கை கொடுக்காமல் அவரை டீஸ் பண்ணிய வீடியோ வைரலானது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகர் நானி அதிவி சேஷை ஸ்ரீனிதிக்கு கை கொடுக்க வைக்க முயன்றார். ஸ்ரீனிதியும் அதிவி சேஷின் கையை பிடித்து குலுக்க முயன்றார். ஆனால், மறுபடியும் சிரித்துக் கொண்டே வணக்கம் வைத்து மொக்கை பண்ணிவிட்டார் ஆத்வி சேஷ்.

ஜாலியான நபர்: 2010ம் ஆண்டு வெளியான கர்மா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமான அதிவி சேஷ் பாகுபலி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஓ பேபி, மேஜர், ஹிட் 2 மற்றும் 3ம் பாகத்திலும் நடித்துள்ளார். ஜி2 மற்றும் டக்காய்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அதிவி சேஷ் செம ஜாலியான நபர் என்கின்றனர். ஸ்ரீனிதி ஷெட்டியை மேடையில் கலாய்த்த வீடியோ வைரலான நிலையில், தனிப்பட்ட முறையில் ஸாரி கேட்டுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X