For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆள் இல்லாட்டியும்.. அட்மின் சிறப்பா செய்யுறார்.. அனிதா சம்பத் இன்ஸ்டா பக்கத்த பாத்தீங்களா!

  |

  சென்னை: செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் அவரது சோஷியல் மீடியா பக்கங்களை அட்மின் கையாண்டு வருகிறார்.

  Anitha Sampath ஐ கடும்பாக்கிய Suresh • சூடு பிடிக்கும் பிக் பாஸ் வீடு

  சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அனிதா சம்பத். எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் மகளான இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

  செய்திகளில் ஒரே மாதிரியாக பார்க்கப்பட்ட அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை போன்று பங்கேற்றார்.

  ஷிவானி செஞ்ச அந்த ஒரு விஷயம்.. பாராட்டும் நெட்டிசன்ஸ்.. சனம்க்கு சுட்டுப் போட்டாக் கூட வராதாம்!ஷிவானி செஞ்ச அந்த ஒரு விஷயம்.. பாராட்டும் நெட்டிசன்ஸ்.. சனம்க்கு சுட்டுப் போட்டாக் கூட வராதாம்!

  பல படங்கள்

  பல படங்கள்

  அவரது என்ட்ரியை பார்த்த பலரும் பொம்மை போன்று செம்ம க்யூட்டாக இருக்கிறார் என ஜொள்ளுவிட்டனர். அனிதா சம்பத் கடந்த ஆண்டு பிரபாகரன் என்பவரை திருமணம் செய்தார். பல படங்களில் நடித்துள்ளார் அனிதா சம்பத். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அனிதா, தொடர்ந்து தனது போட்டோக்களை ஷேர் செய்து வந்தார்.

  அட்மின் ஹேன்டில்

  அட்மின் ஹேன்டில்

  தனது கணவருக்கு நடிகர் ஆக வேண்டும் என்பது சிறுவயது முதல் கனவு என்று உருக்கமாக ஒரு பதிவையும் ஷேர் செய்திருந்தார் அனிதா. இந்நிலையில் அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதால் அவரது சோஷியல் மீடியா பக்கங்களை அவரது அட்மின் ஹேண்டில் செய்து வருகிறார்.

  கணவர்தான் அட்மின்

  கணவர்தான் அட்மின்

  அவரது அட்மின் வேறு யாரும் இல்லை, அவரது கணவர்தான் பிரபாகரன்தான். அனிதாவின் இன்ஸ்டா பக்கத்தை அட்மினாக ஹேண்டில் செய்யும் அவர், இன்று ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அதில், கேமராவை கட்டியணைத்தப்படி உள்ளார் அனிதா சம்பத். மேலும், பெத்த புள்ளய விட்டுட்டு போற மாதிரி என்னமோ ஒரு கனமான உணர்வு.. 7 வர்ஷமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன்..7 வர்ஷ செய்தி வாசிப்பு..எனக்கு சோறு போட்ட வேலை மட்டும் இல்ல ..நான் நேசிச்ச, நான் ஏங்குன, நான் கனவு கண்ட, எனக்கு புடிச்ச வேலை..

  நல்ல வாய்ப்பா..

  நல்ல வாய்ப்பா..

  "உனக்கு அப்பறம் வந்த புது பொண்ணுங்கள்ளாம், சீரியல் ஷோ அது இதுனு வளந்துட்டாங்க.. நீ ஏன் இன்னும் நியூஸயே படிச்சிக்கிட்டு வளராம இருக்கனு நிறைய பேர் கேப்பாங்க"
  திடீர் ட்ரெண்டிங்க்கு பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும் போதும்...அதுல நிறையவே சம்பாதிக்கலாம்னு தெரிஞ்சும்..நான் எந்த வாய்ப்பையும் ஏத்துக்கல..அடுத்து எடுத்து வக்கிற அடி நல்ல வாய்ப்பா நம்ம மனசுக்கு சரினு பட்டா மட்டும் தான் ஏத்துக்கணும்னு கடந்த 2 வர்ஷமா செய்திகளை விடாம இருந்தேன்..

  நிக்கிர வாய்ப்பு

  நிக்கிர வாய்ப்பு

  கடைசியா இப்போதைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம்! நான் பிரம்மிச்சு பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கத்துல நிக்கிர வாய்ப்பு..! உலகத்து சினிமாக்காரன்லாம் வாய பொலந்து வியந்த ஒரு நடிகன் என் பெயர உச்சரிக்க போகிற ஒரு வாய்ப்பு.. அவர் பக்கதுல நின்னு பேசி இருக்கேன்னு என் அடுத்த சந்ததிக்கிட்டயும் சொல்லி சொல்லி பெரும பட்டுக்க கூடிய ஒரு வாய்ப்பு..

  உள்ளே! நான் நானாக!

  உள்ளே! நான் நானாக!

  வெற்றி பெருவதெல்லாம் வேற விஷயம்.. முதல்ல இந்த வாய்ப்பு என்பதே அவ்ளோ எளிதில கிடைக்க கூடிய வாய்ப்பு இல்ல.. இத கண்டிப்பா experience பண்ணனும்னு தான் இந்த முடிவு!! எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து.. உள்ளே! நான் நானாக!! என குறிப்பிட்டுள்ளார்.

  English summary
  Admin is handling Anitha Sampath's Instagram page. Her Admin is her husband Prabhagaran.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X