twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி

    By Siva
    |

    Recommended Video

    அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு-வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி அமைந்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணி திமுகவுக்கு எதிரான கூட்டணி அல்ல மாறாக விஜய்க்கு எதிரான கூட்டணி.

    லோக்சபா தேர்தலையொட்டி அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகள் உள்ளன.

    இந்த கூட்டணி மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு எதிரான கூட்டணி அல்ல தளபதி விஜய்க்கு எதிரான கூட்டணி ஆகும்.

    விஜய்

    விஜய்

    அதிமுக தலைமையிலான கூட்டணி எப்படி விஜய்க்கு எதிரானது என்று யோசிக்கிறீர்களா?. அதிமுகவும் சரி, அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமகவும் சரி விஜய்யின் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் கொடுத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிமுக

    அதிமுக

    விஜய் அட்லியின் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 63 படம் லோக்சபா தேர்தலுக்கு முன்பே வெளியாகும் என்றால் மெகா கூட்டணியின் எதிர்ப்பால் இலவச விளம்பரம் கிடைத்திருக்கும். ஆனால் படம் அக்டோபர் மாதம் தான் வெளியாகிறது.

    சர்கார்

    சர்கார்

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்திற்கு அதிமுக தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் இலவச விளம்பரம் கொடுத்து படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது. அரசின் இலவச பொருட்களை எரித்த காட்சியை நீக்க வைத்தது அதிமுக அரசு.

    பாமக

    பாமக

    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து அமோகமாக இலவச விளம்பரம் கொடுத்தது. சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடித்ததை பார்த்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இப்படி விஜய் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரண்டுள்ளன. ஆனால் தேர்தல் முடிவதற்குள் விஜய் படம் ரிலீஸாகாதே.

    Tolet Review: தமிழ் சினிமாவில் மற்றுமொரு உண்மையான படைப்பு செழியனின் 'டூ லெட்' - விமர்சனம்! Tolet Review: தமிழ் சினிமாவில் மற்றுமொரு உண்மையான படைப்பு செழியனின் 'டூ லெட்' - விமர்சனம்!

    English summary
    ADMK led alliance for Lok Sabdha polls is anti-Vijay as the ruling party, BJP and PMK opposed his movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X