அரசியலில் இருந்து விலகிய அதிமுக எம்எல்ஏ.. முழுக்க முழுக்க தேர்தல் களம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: அரசியலில் இருந்து விலகிய அதிமுக எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.
Recommended Video
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளளது. இதனை முன்னிட்டு கடந்த அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என வெளியிட்டு தீயாய் பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தமிழக தேர்தல் களத்தில் நடைபெறும் சுவாரசிய சம்பவங்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் பிகே. அதன்படி, ஜெயலலிதா மரணத்திற்கு நாங்கள் காரணம் இல்லை என்பதை நிரூப்பிப்போம் என ஸ்டாலின் கூறியது குறித்த தகவலை கூறியிருக்கிறார்.
இதேபோல் மதுரவாயில் அருகே அதிமுகவினர் பிரசாரத்தின் போது திமுகவினர் போல் பிரியாணி கடையில் பிரச்சினை செய்ய மாட்டோம் என்று கூறிய தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது
மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்டவைகளுக்காக திமுக காங்கிரஸ் கட்சியை விளாசும் ஹெச் ராஜா, மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதற்காக அதிமுக எம்எல்ஏ சத்யா அவரது கணவர் பன்னீர்செல்வம் அரசியலில் இருந்து விலகியது உள்ளிட்ட தகவலையும் கூறியிருக்கிறார்.
மேலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தங்களுக்கு வழங்கப்பட்ட 40 சீட்டுக்களில் 37 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து 3 சீட்டுக்களை திருப்பி கொடுத்த குறித்த தகவலையும் வழங்கியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











