twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரலாற்று படம் என கூறிவிட்டு பொய் செய்தியை பரப்புவதா? இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

    |

    சென்னை: சார்பட்டா பரம்பரை படம் தொடர்பாக இயக்குநர் பா ரஞ்சித் உட்பட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.ரஞ்சித். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தார்.

    அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    வாத்தி கம்மிங் பாடலுக்கு இடியாப்ப பரம்பரை ஸ்டைலில் 'குத்து' ஆட்டம் போட்ட டான்ஸிங் ரோஸ்! வாத்தி கம்மிங் பாடலுக்கு இடியாப்ப பரம்பரை ஸ்டைலில் 'குத்து' ஆட்டம் போட்ட டான்ஸிங் ரோஸ்!

    கதாப்பாத்திரங்களாக வாழ்ந்த நட்சத்திரங்கள்

    கதாப்பாத்திரங்களாக வாழ்ந்த நட்சத்திரங்கள்

    ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டியிருந்தனர். படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு நட்சத்திரங்களும் அந்தந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருந்தனர். இதனாலேயே படம் பல தரப்பாலும் பேசப்பட்டது.

    எமர்ஜென் காலம் - அரசியல் நிகழ்வுகள்

    எமர்ஜென் காலம் - அரசியல் நிகழ்வுகள்

    வட சென்னையில் 1970களில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை போட்டியே மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் அப்போது நடந்த அரசியல் நிகழ்வுகளையும் காட்சியாக்கியிருந்தனர். குறிப்பாக எமர்ஜென்சி காலத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலை படமாக்கியிருந்தனர்.

    சினிமாக்காரர்கள் பின்னால் போக மாட்டார்கள்

    சினிமாக்காரர்கள் பின்னால் போக மாட்டார்கள்

    இந்த காட்சிகள் திமுகவுக்கு ஆதராவாக இருந்தன. அதே நேரத்தில் அதிமுகவை குறிப்பிடும் வகையில் சினிமாக்காரர்கள் பின்னால் இனி மக்கள் செல்லமாட்டார்கள் என திமுகவினர் பேசுவது போன்ற காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்தன.

    திமுகவினர் மத்தியில் வரவேற்பு

    திமுகவினர் மத்தியில் வரவேற்பு

    மேலும் கருணாநிதி மகனையே கைது செய்து விட்டார்கள் என்ற வசனமும் இடம்பெற்றிருந்தது. திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் அரசியல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் சார்பட்டா பரம்பரை படத்திற்கு திமுகவினர் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

    அதிமுக வினர் கடும் அதிருப்தி

    அதிமுக வினர் கடும் அதிருப்தி

    திமுக வினர் படத்தை கொண்டாடியும் வந்தனர். ஆனால் அதே நேரத்தில் அதிமுக வினர் சார்பட்டா பரம்பரை படத்தால் கடும் அதிருப்தி அடைந்தனர். படம் வெளியான போதே இரு கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் சிலர் படம் குறித்த தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

    பொய்ச் செய்தியை பரப்புவதா

    பொய்ச் செய்தியை பரப்புவதா

    அதிமுக சார்பில் கண்டனமும் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டிஸில் 'வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான காட்சிகளைக் கொண்டு மக்களிடம் பொய்ச் செய்தியை பா.ரஞ்சித் பரப்பியதாகவும், அந்தக் காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது

    குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது

    உண்மையை ஒப்புக் கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்பட்டா பரம்பரை படம் தொடர்பாக அதிமுக சார்பில் இயக்குநர் பா ரஞ்சித் உட்பட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    ADMK Notice to Director Pa Ranjith for Sarpatta Parambarai movie. ADMK accuses tha Pa Ranjith shows false information in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X