ஜெ. கைது எதிரொலி... வசூலை இழந்த புதிய படங்கள் - தயாரிப்பாளர்கள் சோகம்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளதால், கடந்த வாரங்களில் வெளியான தமிழ்ப் படங்கள் எதிர்பார்த்த வசூலைத் தரவில்லை.

18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டார் ஜெயலலிதா.

இத்தீர்ப்புக்கு எதிராக அதிமுகவினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்சிகள் ரத்து...

காட்சிகள் ரத்து...

தீர்ப்பு வெளியான சனிக்கிழமையன்று பாதுகாப்பு காரணங்களுக்காக திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பிற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் திரையரங்க உரிமையாளர்களும் சில காட்சிகளை ரத்து செய்தனர்.

முடங்கிய மக்கள்...

முடங்கிய மக்கள்...

இது ஒருபுறமிருக்க போராட்டங்களுக்கு அஞ்சி பெரும்பான்மையான மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி விட திரையரங்ரங்குகள், சாலைகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

வசூல் பாதிப்பு...

வசூல் பாதிப்பு...

இதனால், கடந்த வாரம் வெளியான அரண்மனை, மெட்ராஸ் மற்றும் ஜீவா உள்ளிட்ட சில படங்களின் வசூல் பெருமளவில் பாதிக்கப் பட்டது.

சோகம்...

சோகம்...

நல்ல படங்கள் எனப் பெயரெடுத்தும் எதிர்பார்த்த வசூலைத் தராததால் சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்புத் தரப்பு சோகமடைந்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X