twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ.ஆர். ரஹ்மானின் டென்ஷனை போக்கி சிரிக்க வைத்த குட்டிப் பாப்பா

    By Siva
    |

    லண்டன்: லண்டனில் டென்ஷனாக இருந்த இசைப் புயல் ரஹ்மானுக்கு ஒரு செல்லக்குட்டி வீடியோ கால் செய்து மகிழ்ச்சி அளித்துள்ளது.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் சவுண்ட் டிராக் பணிகளை லண்டனில் துவங்கியுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இந்நிலையில் ரஹ்மானுக்கு ஒரு நம்பரில் இருந்து வீடியோ கால் வந்துள்ளது.

    வேலையில் பிசியாக இருந்தாலும் அந்த காலை அட்டன்ட் செய்துள்ளார்.

     மகள்

    மகள்

    ரஹ்மான் வீடியோ காலை அட்டன்ட் செய்தால் பிரபல பாடகர் அட்னன் சாமியின் ஒரு வயது மகள் மெதினா தனது மழலைக் குரலில் பேசி சிரித்துள்ளது. இதை பார்த்த ரஹ்மானுக்கு சட்டென்று டென்ஷன் எல்லாம் பறந்து போய்விட்டது. அவரும் அந்த செல்லக்குட்டியுடன் பேசி மகிழ்ந்துள்ளார். மெதினா ஐபோனில் எதையோ அழுத்த ரஹ்மானுக்கு வீடியோ கால் சென்றிருக்கிறது.

    பாஸ்வேர்டு

    தன் மகள் தெரியாமல் ரஹ்மானுக்கு வீடியோ கால் செய்தது குறித்து அட்னன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, போன்கள், ஐபேட்களுக்கு பாஸ்வேர்டு போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. என் மகள் மெதினா என் போனை எடுத்து ஏ.ஆர். ரஹ்மானுக்கு பேஸ்டைம் செய்து பேசியுள்ளார். அவர் லண்டனில் 2.0 வேலையில் உள்ளார். அவர் என் மகளுக்கு தனது ஸ்டூடியோவை காண்பித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    நன்றி

    அட்னனின் ட்வீட்டை பார்த்த ரஹ்மானோ, டியர் அட்னன்.. அவரின் பேஸ்டைம் மூலம் என் டென்ஷன் போய்விட்டது. மெதினாவுக்கு நன்றி... கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்று ட்வீட்டியுள்ளார்.

    குடும்பம்

    எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்க பிரார்த்தனை செய்கிறேன். மெதினாவுக்கு நீங்கள் அளித்த ஆசி விலைமதிப்பற்றது என்று தெரிவித்துள்ளார் அட்னன். மழலை குழந்தை கொஞ்சிக் கொஞ்சி பேசினால் யாருக்குமே டென்ஷன் பறந்தோடிவிடும்.

    English summary
    Singer Adnan Sami's one-year-old angel Medina facetimed AR Rahman and fixed his grumpy mood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X