கோலிவுட்டின் கலக்கல் அப்பாக்களான ரஜினி, கமல், அஜீத், விஜய்

By Siva

சென்னை: தந்தையர் தினமான இன்று கோலிவுட்டின் கலக்கல் அப்பாக்களை பார்ப்போம்.

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். அத்தகைய தந்தையை கௌரவிக்கும் விதமாக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கோலிவுட்டின் கலக்கலான தந்தைகள் பற்றி பார்ப்போம்.

நடிப்பில் பிசியாக இருந்தாலும் பிள்ளைகளை கவனிக்க தவறாத தந்தைகளை பார்ப்போம்.

ரஜினி

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா தந்தை வழியில் சினிமா துறையில் நுழைந்து தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.

கமல்

கமல்

உலக நாயகன் கமல் ஹாஸனின் மகள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா பெற்றோர் வழியில் நடிப்பை தேர்வு செய்துள்ளனர்.

சரத்குமார்

சரத்குமார்

நாட்டாமை சரத்குமாரின் மகள் வரலட்சுமி தந்தையின் வழியில் நடிப்பைத் தேர்வு செய்துள்ளார்.

அர்ஜுன்

அர்ஜுன்

அர்ஜுன் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிக்க தூண்டாவிட்டாலும் அவராகவே நடிகையாவிட்டார். அவரை நடிக்க அழைத்து வந்தது வேறு யாரும் அல்ல நம்ம விஷால் தான்.

விக்ரம்

விக்ரம்

சீயான் விக்ரமுக்கு அக்ஷிதா, த்ருவ் என்று இரண்டு குழந்தைகள். மகன் த்ருவுக்கு நடிப்பில் அதிக ஆர்வம் உள்ளதாக விக்ரம் தெரிவித்துள்ளார்.

அஜீத்

அஜீத்

அஜீத் குமார் என்ன தான் படங்களில் பிசியாக இருந்தாலும் தனது செல்ல மகள் அனௌஷ்காவுடன் நேரம் செலவளிக்க தவறியது இல்லை.

விஜய்

விஜய்

இளைய தளபதி விஜய் தனது மகன் தன்னைப் போன்று நடிகனாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. மகன் சஞ்சய் அவருக்கு பிடித்தவற்றை செய்யவே விஜய் விரும்புகிறார். விஜய் மகள் திவ்யாவை மீடியாக்களின் கண்களில் படாமல் வைத்துள்ளார்.

சூர்யா

சூர்யா

சிங்கம் சூர்யாவுக்கு தியா, தேவ் என்று 2 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் நடிக்கலாமா என்ற எண்ணத்தில் உள்ளார் ஜோதிகா.

தனுஷ்

தனுஷ்

பார்க்க சுள்ளானாக இருக்கும் தனுஷ் யாத்ரா, லிங்கா என்ற 2 குழந்தைகளின் தந்தை. யாத்ராவும், லிங்காவும் ரஜினியின் செல்லங்கள்.

கார்த்தி

கார்த்தி

கார்த்திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மாடர்ன் பெயர் வைக்கும் இந்த காலத்தில் அவர் தனது மகளுக்கு உமையாள் என்ற தூய தமிழ் பெயரை வைத்துள்ளார்.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

ஜெயம் ரவிக்கு ஆரவ் என்ற மகன் உள்ளார். ரவி என்ன தான் படப்பிடிப்பு படப்பிடிப்பு என்று சென்றாலும் ஆரவுக்காக நேரம் ஒதுக்க தவறுவது இல்லை.

ஜீவா

ஜீவா

நடிகர் ஜீவாவுக்கு ஸ்பர்ஷ் என்ற மகன் உள்ளார். மகனுடன் விளையாடுவதால் என்றால் ஜீவாவுக்கு மிகவும் பிடிக்குமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X