»   »  சமூக வலைதளங்களில் தீயாக பரவிய பாப்பா போட்டோ: யார் மகன்னு தெரிகிறதா?

சமூக வலைதளங்களில் தீயாக பரவிய பாப்பா போட்டோ: யார் மகன்னு தெரிகிறதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மகன் தைமூர் அலி கானின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதற்கு கரீனாவும், அவரது கணவரும், நடிகருமான சயிப் அலி கானும் சேர்ந்து தைமூர் அலி கான் என பெயர் வைத்தனர்.

உடனே அந்த பெயர் ட்விட்டரில் டிரெண்டானது.

தைமூர்

தைமூர்

பிறந்த குழந்தைக்கு கொலைகார மன்னனின் பெயரை வைப்பதா என்று நெட்டிசன்கள் திட்டித் தீர்த்தனர். இந்நிலையில் தைமூர் அலி கானின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

புகைப்படம்

தைமூரின் புகைப்படம் வெளியான சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. மேலும் தைமூர் அலி கான் என்ற பெயர் ட்விட்டரில் டிரெண்டாகத் துவங்கியது.

கரீனா

கரீனா

தன் குழந்தை மிகவும் அழகாக இருப்பதாக நடிகை கரீனா தெரிவித்துள்ளார். குழந்தையை பெற்றெடுத்த 2 மாதத்திற்குள் கரீனா ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்து வருகிறார்.

தாய்

தாய்

தாயாக இருப்பது அருமையான அனுபவம். தாயாகிவிட்டால் பொறுப்புகள் அதிகரித்துவிடும். இதயம் நம் உடலுக்கு வெளியே துடிப்பதை உணர முடியும். அது தான் மிகப் பெரிய பொறுப்பு என்கிறார் கரீனா.

English summary
A new picture of chote nawab Taimur Ali Khan has gone viral on the Internet. The picture is adorable beyond words and will leave you speechless!
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil