பத்து வருஷத்துக்கு பிறகு ஜாய்ன் ஆகியிருக்காங்க... படத்த தயாரிக்கிறது பெருமையா இருக்கு -தாணு பாராட்டு
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் அவரது சகோதரர் செல்வராகவன் இணையும் படம் நானே வருவேன்.
இந்த படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி துவங்கவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன்
நடிகர் தனுஷ் ஆரம்ப காலகட்டங்களில் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன போன்ற படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளனர்.

நானே வருவேன் படம்
இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது 5வது படமாக நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இதையடுத்து புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களிலும் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் நானே வருவேன் போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சியை செல்வராகவன் வெளிப்படுத்தியுள்ளார். வரும் ஆகஸ்ட் 20ம் தேதி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் தாணு மகிழ்ச்சி
போஸ்டரில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் லாப்டாப்பில் படத்தின் சீனை பார்ப்பது போல காணப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இவர்கள் இருவரும் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைவது குறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தயாரிப்பதில் பெருமை
மேலும் சிறப்பான இருவரின் காம்பினேஷன் இந்த படத்தில் மீண்டும் உருவாகியுள்ளதாகவும் இந்த படத்தை தயாரிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுவதாகவும் தாணு தெரிவித்துள்ளார். படத்தின் போஸ்டரை அவரும் ஷேர் செய்துள்ளார். கடந்த ஜனவரி 14ம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் ஸ்டைலாக தனுஷ் சிகரெட் பிடித்தபடி காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











