twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அலும்பு தாங்கலையே மச்சான்... பவர்ஸ்டாரின் கன்னத்தில் ‘இச்’ கொடுத்த எம்.ஜி.ஆர்!!

    |

    சென்னை: அட்ரா மச்சான் விசிலு படத்தின் போஸ்டர்களில் பவர்ஸ்டார் சீனிவாசன் எம்.ஜி.ஆர்., அண்ணா உள்ளிட்டோருடன் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மருத்துவராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பவர்ஸ்டார் சீனிவாசன், அதிகமான படங்களில் நடித்திடாத போதும், தொடர்ந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்பது மறுக்க முடியாது.

    இந்நிலையில், தற்போது அவர் அட்ரா மச்சான் விசிலு என்ற படத்தில் நடித்துள்ளார்.

    மிர்ச்சி சிவா நாயகன்...

    மிர்ச்சி சிவா நாயகன்...

    மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சிங்கமுத்து, சென்ராயன், நைனா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தை திரைவண்ணன் இயக்கியுள்ளார்.

    இசை...

    இசை...

    ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இப்பாடல்களை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

    பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்...

    பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்...

    இந்நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதில், பவர்ஸ்டார் சீனிவாசன், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகியோருடன் நெருக்கமாக இருப்பது போன்று உள்ளது.

    பவர்ஸ்டார்...

    பவர்ஸ்டார்...

    ஒரு போஸ்டரில் பவர்ஸ்டாரின் கன்னத்தில் எம்.ஜி.ஆர். முத்தம் கொடுப்பது போல் உள்ளது. மற்றொரு போஸ்டரில் எம்.ஜி.ஆர், பவர் ஸ்டார் கையை பிடித்துக் கொண்டு இருப்பதுபோலவும், அண்ணாவுக்கு நெருக்கமாக அமர்ந்து பவர் ஸ்டார் பேசிக்கொண்டு இருப்பதுபோலவும் வடிவமைத்துள்ளனர்.

    ஆடியோ ரிலீஸ்...

    ஆடியோ ரிலீஸ்...

    இந்த வித்தியாசமான போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இம்மாதம் 24-ந் தேதி இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Adra Machan Visilu is a 2016 Indian Tamil comedy film directed by Thiraivannan, starring Shiva and Naina Sarwar in the lead roles.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X