»   »  விசில் அடிங்க.... 'அட்ரா மச்சான் விசிலு' டிக்கெட் இலவசமா வாங்குங்க!

விசில் அடிங்க.... 'அட்ரா மச்சான் விசிலு' டிக்கெட் இலவசமா வாங்குங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அட்ரா மச்சான் விசிகூ திரைப்படம் ரம்ஜான் விடுமுறை காலமான வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கான புரமோசன் வேலைகளை ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்து விட்டனர்.

சிவா, பவர் ஸ்டார் நடிப்பில் வெளிவரும் படம் அட்ரா மச்சான் விசிலு. இப்படத்தின் டிக்கெட்டை இலவசமாக பெற நீங்கள் ஒன்று செய்தால் போதும் அது வேறு ஒன்றும் இல்லை, விசில் அடிக்கிற மாதிரி வீடியோ அல்லது போட்டோ எடுக்க வேண்டுமாம்.

ஃபேஸ்புக் அல்லது டுவிட்டரில் அப்லோடு செய்து #AdraMachanVisilu or @AdraMachanVisilu Tag பண்ண வேண்டுமாம். தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு தலா 2 டிக்கெட் வழங்கப்படும்.

சென்னை ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்

சென்னை ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்

விசில் அப்லோடு போட்டி சென்னை தியேட்டர்களுக்கு மட்டுமே. இந்த போட்டி ஜூலை 7ஆம் தேதி வரை மட்டுமே. ஜூலை 8 முதல் டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர் அட்ரா மச்சான் விசிலு படக்குழுவினர்.

டுவிட்டரில் டிரெண்ட்

டுவிட்டரில் டிரெண்ட்

போட்டி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே #AdraMachanVisilu ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. தொடர்ந்து விசில் அடித்து ரசிகர்கள் அப்லோடு செய்து வருவதால் டுவிட்டரில் சென்னையில் டிரெண்ட் ஆகி வருகிறது.

பஞ்ச் டயலாக்

பஞ்ச் டயலாக்

இந்த படத்தில் பவர் ஸ்டார் பவரான வில்லனாக நடித்துள்ளாராம். அவர் பேசியிருக்கிற பஞ்ச் டயலாக்கை இனி தமிழ்நாடே பேசும் என்கிறார் பவர்ஸ்டார். குழந்தைங்க இனி என் பஞ்ச் டயலாக்தான் பேசுவாங்க என்றும் கூறுகிறார் பவர் ஸ்டார்.

ஹீரோயின் கொடுக்கலையே

ஹீரோயின் கொடுக்கலையே

பவர் ஸ்டாருக்கு ஒரு மனக்குறை இருக்கிறது. எந்த படத்துலையும் ஹீரோயின் தரமாட்டுறாங்க... ஐட்டம் சாங் ஆட விட்டாலும் தனியா ஆட விடுறாங்கப்பா என்று கவலைப்படுகிறார்.

பவர் பிறந்தநாள் தேசிய நாள்

பவர் பிறந்தநாள் தேசிய நாள்

பவர்ஸ்டார் பிறந்தநாளை தேசிய நாளாக அறிவிக்க வேண்டும் என்று இந்த படத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் சிவா.
சிவாவிற்கு தனது மனமார்ந்த நன்றியை கூறியுள்ளார் பவர் ஸ்டார்.

English summary
Visil podu upload pannu get free 2 ticket #AdraMachanVisilu movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil