ஆஸ்கர் விழாவில் நடிகையின் உதட்டில் முத்தமிட்ட பிரபலம்... 22 வருஷம் கழிச்சு சேர்ந்த ஜோடி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் கவர்ச்சியான உடையணிந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றனர். விருதுகளை வென்ற ஹாலிவுட் நடிகர்கள் சிரிப்பு, ஆனந்த கண்ணீரில் நனைகின்றனர். இதனிடையே, கிங் காங் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அட்ரியன் பிராடி, நடிகை ஹாலியும் கட்டியணைத்து லிப் டு லிப் முத்தம் கொடுத்துகொண்ட காட்சி வைரலாகி வருகிறது.
பரிந்துரை: ஆஸ்கர் விருது விழாவில் நடிகர், நடிகைகளின் வருகையை கண்டு பார்வையாளர்கள் வியந்து ரசிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக அனோரா, தி ப்ரூடலிஸ்ட், தி கம்ப்ளீட் அன்னோன் கான்க்ளேவ், டூன்: பார்ட் 2, எமிலியா பெரெஸ், அயம் ஸ்டில் ஹியர், நிக்கல் பாய்ஸ், தி சப்ஸ்டன்ட், விக்கட் ஆகிய படங்கள் இந்த முறை விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ரசிகர்கள் கொண்டாட்டம்: இந்தியாவில் ஸ்டார் மூவிஸ், ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் ஆஸ்கர் விருது விழாவை நேரலையில் ரசிகர்கள் கண்டு ரசிக்கின்றனர். அவதார் ஹீரோயின் முதல் அயன்மேன் நடிகர்கள் வரை பல ஹாலிவுட் பிரபலங்கள் ஆஸ்கர் விருது விழாவிற்கு வருகை தந்து ரசிகர்களை குஷிப்படுத்தினர். ஆஸ்கர் விருது விழா எவ்வளவு முக்கியமோ அதேபோன்று விழாவிற்கு வருபவர்களின் ஆடைகளும் பெரிதளவில் கவனம் பெறும்.

கண்ணீர் விட்ட நடிகை: இதில், சிறந்த துணை நடிகைகளுக்கான விருது பட்டியல், சோய் சால்டானா (Emilia Pérez), மோனிகா பார்பரோ (A Complete Unknown), அரியானா கிராண்டே (Wicked), மற்றும் இசபெல்லா ரோசெல்லினி (Conclave), ஃபெலிசிட்டி ஜோன்ஸ் (The Brutalist) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே எமிலியா பெரெஸ் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை சோய் சல்டானா வென்றார். இது அவரது முதல் அகாடமி விருதாகும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மேடையேறிய சல்டானா, இந்த கெளரவத்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன் என கூறிய அவர் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.

விருதுகளை குவித்த படம்: தி ப்ரூட்டலிஸ்ட் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 3 விருதுகளை வென்றது. அதேபோன்று அனோரா திரைப்படம் 5 விருதுகளை தட்டி சென்றது. சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த திரைப்படம் என 5 விருதுகளை வென்றது. இந்நிலையில் இந்த விழாவில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெறும் அதேபோன்று இன்று நடந்த விழாவில் ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்தது.
நடிகைக்கு உதட்டில் முத்தம்: கிங் காங் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அட்ரியன் பிராடி தி ப்ரூட்டலிஸ்ட் படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். விழாவிற்கு வருகை தந்த அவர், ரெட் கார்பெட்டில் நின்றார். அப்போது கேட்வுமன் நடிகை ஹாலி பெர்ரி அட்ரியன் பிராடியை பார்த்த மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்தார். பின்பர் இருவரும் செய்தியாளர்கள் முன்பு லிப் டு லிப் முத்தம் கொடுத்துகொண்ட காட்சி ஆச்சரியத்தை அளித்தது. இதே போன்று 22 வருடங்களுக்கு முன்பு இருவரும் ஆஸ்கர் விருது விழாவில் லிப் டு லிப் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விழாவுக்கு வந்த இடத்தில் இப்படி நடந்துகொள்வது அநாகரிகமாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்தாலும், இவங்க அப்பவே அப்படி என நகைச்சுவையாக கூறி வருகின்றனர்.
விருது வென்றவர்களை விட இன்று அதிகம் பேசப்படும் புகழப்படும் நபர்களாக அட்ரியன் பிராடியும், ஹாலி பெர்ரியும் இணைந்துள்ளனர். இவர்களது முத்தக்காட்சிதான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











