ஓவியா உனக்கு இது தேவையா?: ரசிகர்கள் கவலை #OviyaArmy
சென்னை: ஓவியாம்மா உனக்கு இந்த படம் வேண்டாம்மா என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா தான் இன்றைய தேதியில் தமிழக ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகை. அதனால் அவரின் மார்க்கெட் பிக்கப்பாகிவிட்டது.
அவருக்கு இருக்கும் மவுசை வைத்து படம் எடுத்து ஹிட்டாக்க இயக்குனர்கள் துடிக்கிறார்கள்.

கவுதம் கார்த்திக்
ஹர ஹர மகாதேவகி படத்தை அடுத்து கவுதம் கார்த்திக் நடிக்கும் அடல்ட் காமெடி படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. இந்த படத்தில் ஓவியா நடிக்க உள்ளாராம்.

ஓவியா
படத்தின் தலைப்பை கேட்ட ஓவியா ரசிகர்களோ இதில் இரட்டை அர்த்தம் வருகிறது. எங்கள் தலைவிக்கு தமிழ் சரியாக தெரியாது என்பதால் அவருக்கு படத்தின் தலைப்பின் அர்த்தம் புரிந்ததோ இல்லையோ என்கிறார்கள்.

வேண்டாம்
அடல்ட் காமெடி படத்தில் நடித்தால் ஓவியாவின் இமேஜ் டேமேஜாகிவிடும் என்று அவரது ரசிகர்கள் பயப்படுகிறார்கள். இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று அவர்கள் ஓவியாவுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

லைவ் சாட்
பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து முடிந்த பிறகு ரசிகர்களுடன் லைவ் சாட் செய்வதாக ஓவியா தெரிவித்துள்ளார். அப்போதும் ரசிகர்கள் கவுதம் கார்த்திக் படத்தில் நடிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











