Johnny Sins: மருத்துவமனையில் ஜானி சின்ஸ்.. என்ன ஆச்சு அவருக்கு? இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?
அமெரிக்கா: பிரபல நீலப்பட நடிகர் ஜானி சின்ஸ், இவர் விளம்பரப் படங்களில் நடித்தும் புகழ் பெற்றுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இப்படி இருக்கையில், இவர் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாகவும், மருத்துவர்கள் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டனர் என்றும் பதிவிட்டு, சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஜானி சின்ஸ் அடிப்படையில், கட்டுமானத் தொழிலாளர், அதன் பின்னர் தான் ஆபாச படங்களில் நடிப்பதற்காக வந்தார். இவருக்கு இவரது பெற்றோர்கள் வைத்த பெயர் ஸ்டீவன் வுல்ஃப். ஆபாச படங்களில் நடிப்பதற்காக வந்ததில் இருந்து தனது பெயரை ஜானி சின்ஸ் என்று மாற்றி வைத்துக் கொண்டுள்ளார். இவர் பள்ளிக் காலங்களில் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

இவர் தனது படங்களில் மருத்துவர், பொறியாளர், விண்வெளி வீரர், பிளம்பர் எனப் பல வேடங்களில் நடித்திருப்பதால், இணையத்தில் பெரிய அளவில் மீம்ஸ் நாயகனாகப் பிரபலமானார். அவரது துறை குறித்து தெரியாதவர்கள் கூட அவரது டெம்ப்ளேட்களை மீம்களாக பயன்படுத்துகிறார்கள். நமது அண்டை மாநிலமான கேரளம் மாநிலத்திலும் கூட, ஒரு சுற்றுலா பேருந்தில் இவரது படம் விளம்பரமாக பயன்படுத்தப்பட்டது. அதேபோல் நடிகர் ரன்வீர் சிங் உடன் இவர் ஒரு விளம்பரப் படத்திலும் நடித்திருந்தார். இவர் விளம்பரப் படத்தில் நடித்துள்ளதாலே, அந்த விளம்பரம் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது.
மனைவியும் இதே துறை: இவருக்கு கிஸ்ஸா சின்ஸ் என்ற மனைவி உள்ளார். அவரும் இவருடன் ஆபாச படத்தில் நடித்தும் வருகிறார், இதே துறையில் தான் உள்ளார். ஜானி சின்ஸ் மற்றும் ஆபாச பட நடிகை ஈவா லோவியா ஆகியோர் இணைந்து விண்வெளியில் ஆபாச படத்தை படமாக்கலாம் என்று முயற்சித்து அதற்காக பெருமளவில் நிதி திரட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது.
உடல்நிலை: இப்படி இருக்கையில் ஜானி சின்ஸ் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த ஜானி சின்ஸ், மருத்துவரும், செவிலியர்களும் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். நான் உடல் நலம் பெற காரணமான அவர்களுக்கு நன்றி என்று பகிர்ந்துள்ளார். இவரது போஸ்ட்டைப் பார்த்த பலரும் அவரை நலம் விசாரித்து வருகிறார்கள். இவர் சின்ஸ் டிவி என்ற யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











