ஆபாசத்தின் உச்சம்.. இன்னொரு முரட்டு குத்து.. ஏகப்பட்ட அடல்ட் சீன்களுடன் டெம்ப்ட் ராஜா டீசர் ரிலீஸ்!
சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து ஏகப்பட்ட ஆடல்ட் பேய் படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படமான டெம்ப்ட் ராஜாவின் தமிழ் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆபாசத்தின் உச்சமாக ஏகப்பட்ட அடல்ட் காட்சிகள் டீசர் முழுக்க நிறைந்துள்ளன.

18 பிளஸ் படங்கள்
18 பிளஸ் எனும் அலர்ட் உடன் ஏகப்பட்ட ஆபாச படங்கள் வரிசை கட்டி வெளியாகி வருகின்றன. ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து, பல்லு படாம பாத்துக்கோ, உங்கள போடணும் சார், நீ சுடத்தான் வந்தியா என ஆபாச படங்களின் லிஸ்ட் தமிழ் சினிமாவில் நீண்டு கொண்டே போகின்றன.

டெம்ப்ட் ராஜா
இயக்குநர் வீர்னலா ராமகிருஷ்ணா இயக்கத்தில் தெலுங்கு மொழியில் உருவாகி உள்ள டெம்ப்ட் ராஜா திரைப்படம் தமிழிலும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ராம்கி, திவ்யா ராவ், ஷியாமலா, பொசானி கிருஷ்ணா முரளி உள்ளிட்ட பலர் இந்த ஆடல்ட் காமெடி பேய் படத்தில் நடித்துள்ளனர்.
டெம்ப்ட் ராஜா டீசர்
டெம்ப்ட் ராஜா படத்தின் தெலுங்கு டீசர் மற்றும் டிரைலர் முன்னதாக வெளியாகி உள்ள நிலையில், தற்போது தமிழ் டீசரை படக்குழு வெளியிட்டு வைரலாக்கி உள்ளது. இரண்டாம் குத்து படத்தின் அடுத்த பாகம் போல இந்த படத்தின் டீசர் ஆபாசத்தின் உச்சமாக அமைந்துள்ளது.

ஆபாச வசனங்கள்
காமம் குறித்தும் பாலியல் தொடர்பான லீலைகள் குறித்தும் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு படு ஆபாச வசனங்கள் இந்த டீசரில் நிறையவே இடம்பெற்றுள்ளது. ஹீரோ ராம்கி மற்றும் நாயகி திவ்யா ராவ் பேசும் வசனங்கள் எல்லாமே வக்கிரத்தின் உச்சமாக உள்ளது.

அரை நிர்வாண காட்சிகள்
பெண்களின் ஆடைகளை அகற்றுவது, அரை நிர்வாணமாக காட்டுவது என டீசர் முழுவதும் ஆபாச காட்சிகள் தலை விரித்து ஆடும் விதமாக உள்ளன. விரைவில் இந்த படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தற்போது ஏகப்பட்ட விளம்பரங்களுடன் படு வைரலாக மாறி வருகிறது.


Click it and Unblock the Notifications











