ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் எத்தனை பேருடன் உடலுறவு வைத்திருக்கிறார் தெரியுமா?.. அவரே சொன்ன கணக்கு
சென்னை: ஆபாச பட உலகில் பிரபலமானவர் ஜானி சின்ஸ். இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது மீம்ஸ்களுக்கும் பயன்படுத்தப்படுவார். ஆபாச பட நடிகர் மட்டுமின்றி பிரபல யூடியூபராகவும் வலம் வந்துகொண்டிருக்கும் அவர்; சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் எத்தனை பேருடன் இதுவரை உடலுறவு கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்கும் கணக்கு ரசிகர்களிடையே உச்சக்கட்ட ஷாக்கினை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த 1978ஆம் ஆண்டு பிறந்தவர் ஸ்டீவன் உல்ஃப். அந்த நாட்டில் இருக்கும் இன்டியானா யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்ற அவர் ஆரம்பத்தில் தானாகவே ஒரு தொழில் செய்துவந்தார். ஆனால் காலம் செல்ல செல்ல அவருக்கு அந்தத் தொழிலில் நாட்டம் இல்லாமல் போனது. பிறகு அந்தத் தொழிலை கைவிட்ட அவர் தன்னுடைய 28ஆவது வயதில் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்று முழு நேர ஆபாச பட நடிகராக மாறினார். ஆரம்பத்தில் அவருக்கு தன் பாலின ஈர்ப்பாளராகவே நடிக்கும் வாய்ப்புகள் அந்த உலகத்தில் கிடைத்தன.

நோ சொன்ன ஜானி சின்ஸ்: ஆனால் ஜானி சின்ஸோ தான் நினைத்தது ஒன்றாக இருக்கிறது நடப்பது ஒன்றாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டு அந்த வாய்ப்புகளை எந்த யோசனையும் இல்லாமல் மறுக்க தொடங்கினார். பிறகு வேறு வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து ஆபாச பட உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வர ஆரம்பித்தார் அவர். உலகம் முழுவதும் படு பயங்கரமாக ஃபேமஸ் ஆகவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீம்ஸ்களிலும் ஃபேமஸ்: ஜானி சின்ஸ் ஆபாச பட உலகின் மூலம் ஃபேமஸ் ஆக ஆரம்பித்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை பறக்கவிட்டார்கள். யாரையாவது கிண்டல் செய்ய வேண்டுமென்றாலோ; பாலியல் தொடர்பான ஜோக்குகளுக்கோ அவரது புகைப்படங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
ரன்வீர் சிங்குடன்: அதுமட்டுமின்றி இந்தியாவில் வெளியான ஒரு விளம்பர படத்திலும் அவர் நடித்திருக்கிறார். அவருடன் பிரபல நடிகரும், தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங்கும் நடித்திருந்தார். ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான விளம்பரத்தில்தான் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்த விளம்பரமும் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது. மேலும் சன்னி லியோன் போல் பின்நாட்களில் ஜானி சின்ஸும் திரைத்துறைக்கு நடிக்க வரலாம் என்றும் அப்போதைக்கு பேச்சுக்கள் எழுந்தன.
ஜானி சின்ஸின் பேட்டி: இந்நிலையில் ஜானி சின்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த அந்தப் பேட்டியில் அவரிடம் தொகுப்பாளர், இதுவரை எத்தனை பேருடன் உடலுறவு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜானி, "எத்தனை பேர் என்று நான் இதுவரை கணக்கு வைத்துக்கொண்டதில்லை. அதேசமயம் தோராயமாக சொல்ல வேண்டுமென்றால் 2,500 பேர்வரை உடலுறவு வைத்திருப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











