ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது " அடல்ட் ஒன்லி" வெப் சீரிஸ்

சென்னை: தனது குழந்தை பருவம் முதலேயே தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் மக்களை கவர்ந்தவர் குட்டி பத்மினி. திரையுலகில் அவரது வளர்ச்சி பிரமிப்பானது. சின்னதிரை தொடர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராகவும் வெற்றிகரமாக வலம் வருகிறார்.

குட்டி பத்மினி பல வெப் சீரிஸ்களை எடுத்துள்ளார் அதில் ஒன்று தான் தற்போது அவர் தயாரித்து வரும் 52 எபிசோடுகளை கொண்ட 'போலீஸ் டைரி 2.0 ' எனும் வெப் சீரிஸ். இந்த சீரிஸ்களை பவன், ராஜகணேஷ், சிவமகேஷ், தனுஷ், விக்ரனன், ரமேஷ் பாரதி உள்ளிட்டோர் இயக்கியுள்ளனர். இந்த வெப் சீரிஸில் பூஜா ராமசந்திரன், பாலாஜி மோகன், அஞ்சன ஜெயப்ரகாஷ், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், மற்றும் நடிகர் அசோகனின் மகன் வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Adult only web series released in ODD Platform

இதுவரையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற 52 குற்ற சம்பவங்கள் குறித்தும் அவை எப்படி விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதே இந்த வெப்சீரிஸ் மைய கதை.

இந்த வெப் சீரிஸ் குற்றவியல் சார்ந்த கதை என்பதையும் தாண்டி இது 18 வயதை தாண்டியவர்கள் அடல்ட்ஸ் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் பல காட்சிகள் மிகவும் ஆபாசமாகவே உள்ளது. இப்படி வெளியிடுவதற்கு முக்கிய காரணம் ஆன்லைனில் வெளியாகும் வெப் சீரிஸ்களில் சென்சார் போர்டு என்று ஒரு தடுப்பணையே கிடையாது என்பது தான்.தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் சென்சார் போர்டின் அங்கீகாரம் பெற்ற பின்பு தான் வெளியிடப்படும். ஆனால் அந்த நிபந்தனை ஆன்லைனிற்கு இல்லை என்ற காரணத்தால் சிறிதும் தயக்கமின்றி எதுஎதையோ அவரவர் விருப்பத்திற்கு எடுக்கிறார்கள்.

இது குறித்து குட்டி பத்மினி தெரிவிக்கையில் " இந்த வெப் சீரிஸை நாங்கள் மும்பையில் உள்ள நிறுவனங்களின் கூட்டணியோடு மேற்கொள்கிறோம். அங்கு மக்களின் கலாச்சாரம் , உடை இவை அனைத்திலுமே மாறுபாடு இருக்கும். எனது தயாரிப்பை நான் உலகளவில் எடுத்துச்செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவாறு அது அமைக்கப்பட வேண்டும். இல்லையேல் என்னுடைய தயாரிப்பு செல்லுபடியாகாது.

Adult only web series released in ODD Platform

மேலும் இது போன்ற விஷயங்கள் மும்பையில் எல்லாம் மிகவும் சாதாரணமானது . நமது கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தான் நான் தயாரிப்பேன் என்றால் என் நிறுவனத்தை நான் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மக்கள் என்னுடைய சின்னத்திரை தொடர்கள் பற்றி நன்கு அறிவார்கள். குடும்பம் சார்ந்த எத்தனையோ விதமான தொடர்களை நான் எடுத்துள்ளேன்.

ஜீ 5 ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியிடப்படுவதால் உலக தரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல காட்சிகளில் இதில் நடித்திருப்பவர் மிகவும் துணிச்சலாக நடித்துள்ளனர். தமிழ் பெண்கள் நிச்சயம் இது போல நடிக்க ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். இதற்காகவே சில பெண்களிடம் நெருக்கமான காட்சிகளில் நடிக்க சம்மதம் பெற்று நடிக்கவைக்கப்பட்டுள்ளது. அவர்களின் துணிச்சல் பாராட்டபட வேண்டும்.

சமுதாயத்தில் நடிக்கும் சம்பவங்களை தான் இந்த சீரிஸ் மூலம் எடுத்துரைத்துள்ளோம். சமீபத்தில் ஒரு கணவன் தனது மனைவியை கை, கால்களை எல்லாம் தனித்தனியாக வெட்டி எறிந்த ஒரு சம்பவம் கூட இந்த வெப் சீரிஸில் 2 எபிசோடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

Adult only web series released in ODD Platform

இந்த வெப் தொடரில் பலதரப்பட்ட ஸ்வாரஸ்யங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பொதுவாகவே பலர் போலீஸ் சார்ந்த பல வெப் தொடர்களை எடுக்கிறார்கள். குற்றம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதையும் தாண்டி குற்றம் செய்பவர்களின் நோக்கத்தின் பின்னணி என்ன என்பதையும் மிகவும் துல்லியமாக படமாக்கப்பட்டுள்ளது. இது மற்ற போலீஸ் சார்ந்த வெப் தொடர்களில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கும் என்றார் குட்டி பத்மினி.

இந்த வெப் டாட்ஸர்கள் மூலம் மக்களை விழிப்புணர்வோடு இருந்து இது போன்ற குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளஉதவியாக இருக்கும். இந்த போலீஸ் டைரி 2 . 0 வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்தில் நவம்பர் 1 ம் தேதி முதல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கப்பட்டு பார்க்கலாம்.

குட்டி பத்மினி குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை திரை வாழ்விலும் ஊடகத்துறையிலும் பல பரிமாணங்களை எடுத்துள்ளார். இன்றைய காலத்திற்கேற்ப ட்ரெண்டிங்கான கதையம்சங்களை எடுத்து கலக்கி வருகிறார் என்பதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும். இருப்பினும் தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்பவும் சில ப்ராஜெக்ட்கள் எடுத்து செய்தால் நம் தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைவர்.

இது அடல்ட் மட்டுமே பார்க்கக்கூடிய வெப் தொடராக இருந்தாலும் குடும்பத்துடன் பார்க்க முடியாது என்பது சிறிது வருத்தம் அளித்தாலும் தென்னிந்திய சினிமாவிலும் வடஇந்திய சினிமாவிற்கும் டஃப் பைட் கொடுக்கும் குட்டி பத்மினியை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும் . மேலும் மேலும் அவர் பல வித்யாசமான கதை அம்சங்களாலும் நம்மை மகிழ்விக்க பிலிமி பீட் சார்பாக வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X