அதிர்ச்சி.. அடுத்தடுத்து மரணிக்கும் ஆபாச பட நடிகைகள்.. 26 வயது இளம் நடிகை சோபியா லியோன் காலமானார்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆபாச படங்களில் நடித்து வரும் நடிகைகள் இந்த ஆண்டு தொடர்ந்து அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. 26 வயது இளம் நடிகை சோபி லியோன் தற்போது மரணித்து இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சோபி லியோன் மரணம் குறித்து அவரது வளர்ப்பு தந்தை உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், இந்த திடீர் மரணம் குறித்து போலீஸார் தீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபாச படங்களில் நடித்து அதிகளவில் பணத்தை சம்பாதித்து வந்த சோபி லியோன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவே ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு தீர விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
சன்னி லியோன் போல சோபி லியோன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த கரஞ்சித் கவுர் அமெரிக்காவில் ஆபாச பட உலகில் அடியெடுத்து வைத்த போது அவரது பெயர் சன்னி லியோன் என மாற்றப்பட்டது. ஆபாச பட உலகில் பல நடிகைகளுக்கு லியோன் என்கிற பெயர் வைப்பார்கள் போல, சன்னி லியோன் போல ஷைன் ஆக நினைத்ததால் சோபி லியோன் என பெயர் வைத்துக் கொண்டாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
18 வயதில் ஆபாச படம்: 1997ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சோபி லியோன் 18 வயதில் ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கினார். 9 வருடங்களில் 1 மில்லியன் டாலர் வரை சம்பாதித்து வைத்துள்ள சோபி லியோன் திடீரென உயிரிழந்தது ரசிகர்களையும் ஆபாச பட உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மர்ம மரணம்: கடந்த மார்ச் 1ம் தேதி மூச்சு பேச்சில்லாமல் உடல் செயலிழந்த நிலைக்கு தள்ளப்பட்ட சோபி லியோனை மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறதா என போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடரும் மரணங்கள்: இந்த ஆண்டு ஏற்கனவே கேக்னே லின் கார்ட்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தாய்னா ஃபீல்ட்ஸ் இதுவரை உயிரிழந்த நிலையில், தற்போது 4வது நபராக சோபி லியோன் உயிரிழந்துள்ளார். ஆபாச நடிகர்கள் தொடர்ந்து இப்படி உயிரிழந்து வரும் நிலையில், என்னதான் நடக்கிறது என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











