தமிழகத்தில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய வரும் அத்வானி, மோடி, ஹேமமாலினி!

By Shankar

Hemamalini
சென்னை: தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று வருகிறார் நடிகை ஹேமமாலினி.

தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு படையெடுக்கிறார்கள். அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி 7-ந் தேதி மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்கிறார்.

நடிகை ஹேமமாலினி இன்று 6-ந் தேதி முதல் 2 நாட்கள் சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். நடிகை பிரித்வி ராணியும் 8-ந் தேதி சென்னையில் பிரசாரம் செய்கிறார்.

அத்வானி-மோடியும் வருகிறார்கள்...

அத்வானி 10-ந் தேதி தமிழகம் வருகிறார். அவர் 2 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார். மதுரை, சென்னையில் பேசுகிறார். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி 10-ந் தேதி தளி தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

சுஷ்மா சுவராஜ் 8-ந் தேதி தக்கலையில் பேசுகிறார். பா.ஜனதா முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் 6-ந் தேதி புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடியில் பிரசாரம் செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X