twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்?

    |

    Recommended Video

    இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்-வீடியோ

    சென்னை: காரப்பா சில்க்ஸ் கடைக்கு தீபாவளியை முன்னிட்டு கமல்ஹாசன் பெயரில் டிவிட்டரில் உலா வருகிறது.

    தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் கடைகளில் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. துணிக்கடைகள் குறித்த விளம்பரங்களும் அசத்தி வருகின்றன.

    தேசிய அளவில் அங்கீகாரம்... அசுரனை பாராட்டிய கரண் ஜோஹர்!தேசிய அளவில் அங்கீகாரம்... அசுரனை பாராட்டிய கரண் ஜோஹர்!

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    இதன் உரிமையாளர் காரப்பன். இவர் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இந்துக்கடவுள்களை படு கேவலமாக விமர்சித்தார்.

    பரதேசி

    கிருஷ்ணரை பொம்பளை பொறுக்கி என்றும் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய அத்திரவரதரை பரதேசி என்றும் குறிப்பிட்டார். மேலும் அத்திவரதருக்கு காஞ்சி நெசவாளிகள் பட்டு நெய்து கொடுத்ததையும் கடுமையாக விமர்சித்தார்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தன.

    காரப்பா ஜோரப்பா

    காரப்பா ஜோரப்பா


    இந்நிலையில் கமல்ஹாசன் பெயரில் காரப்பா சில்க்ஸ் கடைக்கு விளம்பரம் செய்வது போன்ற டிவிட் வைரலாகி வருகிறது. அந்த டிவிட்டில்,
    பாரப்பா ஊரினிலே
    பல கடையுண்டு
    யாரப்பா அங்கெல்லாம்
    துணி வாங்குவார்?
    காரப்பா சில்க்கினிலே
    புடவை வாங்கு
    ஜோரப்பா விலையும்
    தரமும் இங்கு.
    இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

    கமல் பெயரில்..

    கமல் பெயரில்..

    இந்த டிவிட்டர் ஹேன்டில் கமலுடையது இல்லை என்பது உறுதியாகியுள்ளது. காரப்பா சில்க்ஸ் உரிமையாளர் இந்துக்கடவுளை திட்டிய நிலையில் கமல் பெயரை பயன்படுத்தி விளம்பரம் தேடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    English summary
    Advertisement for Karappa silks comes in Kamal hassan name. It is fake ID it seems. Karappa silks owner Karappan spoke bad words about Hindu gods.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X