twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “ஓ மை கடவுளே“ டிக் டாக் பிரபலங்களுடன் விளம்பரம்.. படக்குழுவின் புதுமுயற்சி !

    |

    Recommended Video

    OH MY KADAVULEY TEAM INTERVIEW |V-CONNECT | FILMIBEAT TAMIL

    சென்னை : ஓ மை கடவுளே படத்தை வித்தியாசமான முறையில் படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.

    நடிகர் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி இருக்கும் "ஓ மை கடவுளே" ரசிகர்கள் இடையே நல்ல பாராட்டை பெற்று வருகிறது. படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார் . படத்தை தயாரித்து உள்ளார் ராட்சசன் தயாரிப்பாளரான ஜி.டில்லி பாபு.

     Advertisement for the movie ‘’oh my kadavule’’ by tiktok

    ஒரு படம் மக்களை அடைவதற்கு அடிப்படையில் விளம்பரம் என்பது மிகவும் அவசியமாகும். சினிமாவின் ஆரம்பம் முதலே விளம்பர போஸ்டர்கள், அச்சடித்த காகிதங்கள் என்று துவங்கி இணையம் வரை விளம்பரங்கள் என பல்வேறு வித்தியாசமான யுக்திகளை இந்திய சினிமா கடந்த 100வருடமாக சந்தித்து வருகிறது .

     Advertisement for the movie ‘’oh my kadavule’’ by tiktok

    தற்போது இருக்கும் இணைய வளர்ச்சியில் அதிகபடியான சினிமா விளம்பரங்கள் இணையம் வாயிலாக தான் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்றைய சூழலில் இணையம் என்றவுடன் இந்திய ரசிகர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு செயலி என்றால் அது டிக்டாக் செயலி தான் .

    ஜீவி பிரகாஷின் குரலில் மயங்கிய சூர்யா.. டிரெண்டாகும் வீடியோ!ஜீவி பிரகாஷின் குரலில் மயங்கிய சூர்யா.. டிரெண்டாகும் வீடியோ!

    சமீபத்தில் பாலிவுட் சினிமாவில் மிக பெரிய புரட்சி வெடித்தது. டிக்டாக்கில் பிரபலமான பலரும் சினிமா நடிகர்களுக்கு சமமாக கொண்டாடபட்டார்கள், இந்த மோக அலை மலையாளம் மற்றும் தமிழ் டிக்டாக் தளங்களிலும் நடைப்பெற்றது. கல்லூரியில் சினிமா பிரபலங்களுக்கு இணையாக பிரபலமாக அழைக்கபட்டனர் டிக்டாக் வாசிகள்.

    ஒருபடி மேலே போய் மலையாளத்தில் ஒரு டிக் டாக்ரை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து உள்ளது பிக்பாஸ் சீசன் 2 மலையாளம். இந்நிலையில் டிக் டாக்கர்களை ஹிந்தியில் பட விளம்பரங்களுக்கு பயன்படுத்த துவங்கினார்கள். தீபிகா படுகோனே மற்றும் சன்னி லியோன் போன்றவர்கள் டிக்டாக் செய்பவர்களுடன் இணைந்து சகஜமாக டிக்டாக் செய்து தங்களது படங்களுக்கு ப்ரொமோஷன் செய்தனர். படங்களுக்கும் குறைந்த செலவில் பெரிய அளவிலான விளம்பரங்கள் நடந்தது .

     Advertisement for the movie ‘’oh my kadavule’’ by tiktok

    தற்போது இந்த யுக்தியை தமிழில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறது "ஓ மை கடவுள்" படக்குழு. தமிழின் மிக பிரபலமான டிக்டாக்கர்களை அழைத்துள்ள இந்த குழு படக்குழுவுடன் இணைந்து ஓ மை கடவுளே படத்தின் பாடல்களுக்கு ஏற்றவாறு வித்தியாசமான முறையில் வீடியோக்களை எடுத்து இணையத்தில் ஓ மை கடவுளே என்ற ஹாஸ்டேக்குடன் பதிவேற்றியுள்ளனர் .

     Advertisement for the movie ‘’oh my kadavule’’ by tiktok

    இந்த விளம்பரங்களின் மூலம் டிக்டாக் செய்பவர்களுக்கு எந்த மாதிரியான லாபம் இருக்கிறது என பலர் சந்தேகிக்கிறார்கள். இதன் மூலம் பிரபலமடைந்த டிக் டாக்கர்கள் மேலும் பிரபலமடைகின்றனர். இதன் மூலம் நேரடியான சினிமா வாய்ப்பும் மற்ற பல நடிக்கும் வாய்ப்பும் கிடைகிறது .

    English summary
    oh My Kadavule team has used Tik Tok fames to promote their movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X