தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. நீதிமன்றத்தில் என்ன நடந்தது.. குழந்தைகளின் நிலை என்ன ?
சென்னை: தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த போதும், இருவரும், தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழக்கி தீர்ப்பளித்தது. இது பலரை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் பிரியதர்ஷினி நீதிமன்றத்தில் நடந்த பல விஷயத்தை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிவதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். ஆனால், இவர்களின் பிரிவு தற்காலிகமானது தான் என்றும், இருவரும் சேர்ந்து விடுவார்கள் என சோசியல் மீடியாக்களில் பல தகவல்கள் வெளியானது. ஆனால், அவை அனைத்தும் பொய் என்பது போல இருவருக்கும் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

ஒரு நிமிஷம் கூட பேசவில்லை: இதுகுறித்து செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழக்கறிஞர் பிரியதர்ஷினி பேட்டி அளித்துள்ளார். அதில், தனுஷ் , ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், மூன்று முறையும் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கடைசியாகத்தான் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால், அப்போதுக்கூட இருவரும் ஒரு நிமிஷம் கூட பேசவில்லை.
முடிவில் உறுதி: சேர்ந்து வாழ விருப்பம் இருக்கிறதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இருவருமே பிரிந்து வாழ விரும்புவதாக கூறியதை அடுத்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக விவாகரத்து வழக்கில் ஒருவருக்கு விருப்பமிருந்து, மற்றவருக்கு விருப்பமில்லை என்றால், நீதிமன்றம் பல சமரச பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்யும். ஆனால் இவர்களின் விவகாரத்தில் இருவருமே மனம் ஒத்து சமரசமாக பிரிந்து செல்லும் முடிவில் உறுதியாக இருந்ததால், நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி இருக்கிறது.
மிகப்பெரிய வலி: இவர்களின் வழக்கில், நீதிபதி, விவாகரத்து குறித்து மட்டும் தான் நீதிமன்ற தீர்ப்பு அளித்திருந்தார். குழந்தைகள் குறித்து எந்த விதமான கருத்தையும் நீதிபதி தெரிவிக்கவில்லை. ஏனென்றால் இருவரும் பரஸ்பரமாக பிரிய முடிவு எடுத்து இருப்பதால், கணவன், மனைவி இருவருமே குழந்தைகள் யாருடன் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இதற்கு முன், குழந்தைகள் அப்பாவுடன் ஒரு நாள், அம்மாவுடன் ஒரு நாள் இருந்தார்களோ? அதே போலவே இப்போதும் இருப்பார்கள். என்னதான் குழந்தைகள் வளர்ந்து விட்டாலும், இவர்களின் பிரிவை புரிந்து கொண்டாடும், அவர்களுக்குள் அந்த வலி இருந்து கொண்டு தான் இருக்கும். என்னதான் பணம் இருந்தாலும், பெரிய செலபிரிட்டியின் குழந்தைகளாக இருந்தாலும், அப்பா, அம்மாவை பிரிந்து வாழ்வது என்பது மிகப்பெரிய வலி தான்.
தனுஷ், ஐஸ்வர்யா சேர்ந்துவிடுவார்கள், இருவரும் படம் பார்க்க ஒன்றாக வருகிறார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. நீதிமன்றத்தில் மூன்று முறை ஆஜராகாத போதும், இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவை அனைத்தையும் உடைக்கும் வகையில் இருவரும் பிரிந்துவிட்டார் என்று வழக்கறிஞர் பிரியதர்ஷினி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











