ஏகன், இது என்ன மாயம் படங்கள்ல கடைசியா பார்த்தது.. சீறு படம் மூலம் மறுபடியும் தமிழில் நவ்தீப்!
Recommended Video
சென்னை: அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் நவ்தீப், சீறு படத்தில் சீரியஸான வில்லன் ரோலில் அசத்தியுள்ளார்.
டோலிவுட் நடிகரான நவ்தீப், 2004ம் ஆண்டு வெளியான ஜெய் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் படம், நவ்தீப் மற்றும் ஆர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் வில்லன் அவதாரம் எடுத்தார்.
கடைசியாக தமிழில் அஜித்தின் ஏகன் மற்றும் விக்ரம் பிரபுவின் இது என்ன மாயம் படங்களில் தமிழ் ரசிகர்கள் நவ்தீப்பின் நடிப்பை பாராட்டி இருந்தனர்.
தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரத்ன சிவா இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜீவாவின் சீறு படத்தில் மெயின் வில்லனாக நவ்தீப் நடித்து அசத்தியுள்ளார்.

ஜீவாவின் சீறு படத்தின் ஸ்பெஷலான விஷயம் என்றால், இரண்டு ஹீரோக்கள் ஜீவாவுக்கு வில்லனாக நடித்துள்ளது தான்.
பப்பி மற்றும் ஜோஷ்வா இமை போல் காக்க படங்களின் நாயகன் வருண் மற்றும் நவ்தீப் சீறு படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து தங்களது நடிப்புத் திறமையை கோலிவுட் ரசிகர்களுக்கு மீண்டும் நிரூபித்துள்ளனர்.
தங்கை சென்டிமென்ட், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பெண்ணிய எழுச்சி சம்பந்தப்பட்ட கதையில் இப்படியொரு வெயிட்டான நடிகர்களை களம் இறக்கி இயக்குநர் ரத்ன சிவா சிக்ஸர் அடித்துள்ளார் என்றே சொல்லலாம்.
விஜய் சேதுபதியின் றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவாவுக்கு அந்த படத்தில் அமைந்தது போல சீறு படத்திலும் இமான் இசையில் சிறப்பான பாடல்கள் அமைந்துள்ளன.
கண்ணம்மா கண்ணம்மா பாடல் றெக்க படத்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்ந்தது.
அதேபோல இமானின் இசையில் பார்வையற்ற திருமூர்த்தி பாடியுள்ள செவ்வந்தியே மதுவந்தியே பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்த புரமுலோ படம் 250 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது.
அந்த படத்தில் மாஸ் வில்லனாக நடித்த நவ்தீப், கோலிவுட்டில் சீறு படம் மூலம் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார்.
மறுபடியும் ஒரு ரவுண்டு வில்லனாக தமிழ் திரைப்படங்களில் நடித்து அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











