சில தவிர்க்க முடியாத காரணங்கள்.. வரும் 28ஆம் தேதி விஜய் டிவியில் ரிலீஸ் ஆகிறது ஏலே திரைப்படம்!

சென்னை: நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த ஏலே திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வரும் 28ஆம் தேதி விஜய் டிவியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், தனது அடுத்த படமாக ஏலே படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ளனர். இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

27ஆம் தேதி ஓடிடியில்

27ஆம் தேதி ஓடிடியில்

இந்தப் படம் 12ஆம் தேதியான நாளை திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஓடிடி தளத்தில் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 27ஆம் தேதி படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

தியேட்டர் உரிமையாளர்கள் தீர்மானம்

தியேட்டர் உரிமையாளர்கள் தீர்மானம்

மாஸ்டர் படம் திரையரங்கில் ரிலீஸ் ஆன கையோடு ஓடிடி தளத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்களின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகி 50 நாட்கள் கழித்தும், சிறிய பட்ஜெட் படங்கள் 30 நாட்கள் கழித்தும் ஓடிடியில் வெளியாகும் என்னும் உத்தரவாதக் கடிதத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்தால் மட்டுமே அந்தப் படங்களைத் திரையிட முடியும் தீர்மானம் நிறைவேற்றினர்.

உத்தரவாதம் அளிக்க முடியவில்லை

உத்தரவாதம் அளிக்க முடியவில்லை

இந்நிலையில் ஏலே படத்தை 27ஆம் தேதி ஓடிடியில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதனால், படக்குழுவால், திரையரங்க உரிமையாளர்களின் தீர்மானத்திற்கு ஏற்ப உத்தரவாதக் கடிதம் அளிக்க முடியவில்லை என தகவல் வெளியானது.

படக்குழு அறிக்கை

படக்குழு அறிக்கை

இந்நிலையில் வரும் 28ஆம் தேதி ஏலே திரைப்படத்தை நேரடியாக விஜய் டிவியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும் உற்சாகத்துடன் 2021 பிப்ரவரி 12 அன்று உலகம் முழுவதும் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தோம்.

தவிர்க்க முடியாத காரணங்கள்

தவிர்க்க முடியாத காரணங்கள்

ஏலே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக மூன்று நாட்களே இருந்த நிலையில் சில ஆச்சர்யகரமான புது விதிகளாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

விஜய் டிவியில் ரிலீஸ்

விஜய் டிவியில் ரிலீஸ்

ஆகையால் திரையரங்குகளை தவிர்த்து எங்கள் படத்தினை உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து கொண்டு செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து 2021 பிப்ரவரி 28 அன்று ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக நேரடியாக இத்திரைப்படத்தினை வெளியிடுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X