'ஏலே'பாடல்கள் இன்று வெளியீடு...ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சமீப காலமாக பிரபலமடைந்தவர் இயக்குனர் ஹலீதா ஷமீம்.
பூவரசம் பீப்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக தடம் பதித்தார் ஹலீதா ஷமீம்.
தற்போது சமுத்திரக்கனி, நடிப்பில் வெளிவரவுள்ள ஏலே படத்தை இயக்கியுள்ளார் ஹலீதா ஷமீம்.

மனதை வருடியது
பெண் இயக்குனர்கள் மத்தியில் தனித்துவமான படைப்புகளை கொடுத்து வருகிறார் ஹலீதா ஷமீம்.
இவரது இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான சில்லுக் கருப்பட்டி படம் ரசிகர்கள் மனதை வருடும் வகையில் அழகான படைப்பாக அமைந்தது.

முதல் தயாரிப்பு
அதை தொடர்ந்து ஹலீதா ஷமீம் இயக்கவுள்ள ஏலே படத்தை பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி 'வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் தயாரித்துள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல்
தயாரிப்பாக ஏலே திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

ரசிகர்கள் வரவேற்பு
கடந்த வாரம் ஏலே படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபல முன்னணி இயக்குனர்களும் ட்ரைலரை பாராட்டி டீவீட்களை பதிவிட்டனர். சமுத்திரக்கனி - மணிகண்டன் ஆகியோரின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் ரசிக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

சோனி மியூசிக்
ஏலே படத்தினுடைய பாடல்களை இன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தினுடைய பாடல்களுக்கான உரிமையை சோனி மியூசிக் சௌத் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











