கொடூரமாக கொல்லப்பட்ட ஆப்கன் காமெடி நடிகர்.. நாங்க இல்லை என மறுக்கும் தாலிபன்கள்.. என்ன தான் ஆச்சு?
ஆப்கானிஸ்தான்: பிரபல காமெடி நடிகர் நாசர் முகம்மதுவை கொடூரமாக கொலை செய்துள்ள விவகாரம் உலக அரங்கில் அதிர்ச்சி அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
தீவிரவாத அமைப்பான தாலிபன்கள் இந்த கொடூர கொலையை செய்ததாக நடிகர் நாசர் முகம்மதுவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஆனால், இந்த கொலைக்கும் எங்களுக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என தாலிபன் அமைப்பு மறுத்து இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஆப்கன் நடிகர்
காசா ஸ்வான் என பிரபலமாக அழைக்கப்பட்டு வந்தவர் ஆப்கன் நாட்டை சேர்ந்த பிரபல காமெடி நடிகர் நாசர் முகமது. இவர் முன்னதாக காந்தகார் காவல் நிலையத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாசர் முகமது கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது உலகையே அதிரச் செய்துள்ளது.

கொடூர கொலை
பிரபல ஆப்கன் காமெடி நடிகர் நாசர் முகமதுவை தாலிபன்கள் தான் கொடூரமாக கொன்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். நடிகர் நாசர் முகமதுவின் கொடூர கொலை ஆப்கன் சினிமா உலகத்தை மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாங்கள் இல்லை
ஆனால், காமெடி நடிகர் நாசர் முகமதுவை நாங்கள் கொல்லவில்லை என தாலிபன் அமைப்பு அதிரடியாக மறுத்துள்ளது பெரும் சலசலப்பையும் ஏகப்பட்ட கேள்விகளையும் உருவாக்கி இருக்கிறது. தாலிபன் அமைப்பு கொல்லவில்லை என்றால் ஆப்கன் நடிகரை கொன்றது யார் என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

அடிக்கும் தாலிபன்கள்
ஆனால், நடிகர் நாசர் முகமதுவை கைது செய்து கொடூரமாக தாலிபன்கள் அடித்து உதைக்கும் வீடியோ ஆதாரங்களும் வெளியாகி தாலிபன்கள் தான் இந்த கொடூர கொலையை செய்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக ஆப்கன் அரசு தெரிவித்து இருக்கிறது. மேலும், பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து ஆப்கனில் தாலிபன்களின் ஆட்டம் அதிகமாக உள்ளதாகவும் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சையது அகமது சைலாப் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











