ஆப்கான் கிரிக்கெட் வீரர் வரைக்கும் போயிருக்கற விஜய்யோட வாத்தி கம்மிங் பாடல்
சென்னை : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் ஆப்கன் வீரர் ரஷீத் கான்.
இவர் சமீபத்தில் ஆன்லைனில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதில் தன்னுடைய விருப்பத்திற்குரிய தமிழ் பாடல் குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சன்ரைசர்ஸ் வீரர்
ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் ஆப்கன் வீரர் ரஷீத் கான். தன்னுடைய அணிக்காக ஒவ்வொரு சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை பரிசளித்து வருகிறார் ரஷீத். இந்த சீசனிலும் அவருடைய அணிக்காக அவர் சிறந்த முறையில் கைகொடுத்தார்.

ரஷீத் உறுதி
தற்போது ஐபிஎல் சீசன் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தான் மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், ஐதராபாத் தன்னுடைய இரண்டாவது வீடு என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஒரே வார்த்தையில் விவரிக்க முடியாது
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி குறித்து ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்ட ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அவர், தோனியை ஒரே வார்த்தையில் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் கோலி குறித்த கேள்விக்கும் அவர் ஒரு கிங் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய்யின் வாத்தி கம்மிங்
அவருடைய விருப்பமான உணவு பார்பிக்கூ என்று தெரிவித்த அவர், தான் விரைவில் பாலிவுட்டில் இணைவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய விருப்பத்திற்குரிய தமிழ் பாடல் வாத்தி கம்மிங் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதில் மூலம் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











