twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2003-ல் ஜிவி... 14 ஆண்டுகளுக்குப் பின் அசோக்குமார்... காரணம் இதே அன்புச் செழியன்!

    By Shankar
    |

    Recommended Video

    2003-ல் ஜிவி...14 ஆண்டுகளுக்குப் பின் அசோக்குமார்...காரணம் இதே அன்புச் செழியன்!- வீடியோ

    சென்னை: 2003-ம் ஆண்டு மே மாத பகல் வேளை. சென்னை நகரெங்கும் ஒரே பரபரப்பு. பிரபல தயாரிப்பாளர் ஜிவி தூக்குப் போட்டு தற்கொலை என்ற செய்தி தீயாய் பரவியது. ஜிவி வீடு இருந்த சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை முழுக்க மக்கள், சினிமாக்காரர்கள்.

    அதுவரை ஜிவியின் படங்களைப் பார்த்து அவர் மீது சினிமாக்காரர்கள் கொண்டிருந்த பிரமாண்ட இமேஜ், அவருக்கிருந்த மலையளவு கடன்களைப் பார்த்து பரிதாபமாக மாறியது.

    After 14 years of GV's suicide, now Ashok Kumar commits suicide for the same reason

    பைனான்சியர் மதுரை அன்புச் செழியனிடம் அவர் ஏகத்துக்கும் கடன்கள் வாங்கியிருந்தார். ரொம்ப நாணயமாக அவர் திருப்பிக் கொடுத்தாலும், தளபதிக்குப் பிறகு அவர் தயாரித்த படங்கள் வரிசையாக அடி வாங்கின. கடைசியாக அவர் தயாரித்த சொக்கத் தங்கம் ஓரளவு போனாலும், அது ஜிவியின் கடன்களை அடைக்கப் போதுமானதாக இல்லை.

    ஒரு கட்டத்தில் ஜிவி கனவிலும் நினைக்காத அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. அவர் மனைவி கொடைக்கானலில் சிறைப் பிடிக்கப்பட்டார். அடுத்த நாள் தூக்கில் தொங்கினார் ஜிவி.

    ஆனால் அன்புச் செழியன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் வெளிப்படையாக ஜிவி கடும்பத்தினர் புகார் தரவில்லை.

    After 14 years of GV's suicide, now Ashok Kumar commits suicide for the same reason

    அதன் பிறகு திரையுலகினர் அன்புவை ஒதுக்கிவிடவில்லை. இன்னும் நெருக்கமானார்கள் அவருடன். அவரிடம் பைனான்ஸ் வாங்காத ஆட்களே இல்லை என்றாகிவிட்டது.

    அன்புச் செழியன் பைனான்ஸில் சிக்கிக் கொண்ட ஜிவி தற்கொலை நடந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதே காரணத்துக்காக மீண்டும் ஒரு தற்கொலை. இந்த முறை சசிகுமாரின் பார்ட்னரான அசோக்குமார். இவர்கள் அன்புவிடம் சிக்கக் காரணமும் வரிசையாக தோல்விப் படங்கள்தான்.

    English summary
    After 14 years of popular producer GV's suicide, now Company Productions Ashok Kumar committed suicide for the same reason i.e, Anbu Sezhiyan finance issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X