கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன்-2! ஊழல் துடைக்க சாட்டை எடுப்பாரா கமல்?

By Vignesh Selvaraj

சென்னை : தற்போது ரஜினியை வைத்து '2.O' படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தின் வேலைகள் முடிந்ததும் அஜித் நடிக்க உள்ள படத்தின் வேலைகளைத் தொடங்க இருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், அஜித் மூன்று மாத ஓய்வில் இருப்பதால் விக்ரமை வைத்து 'அந்நியன் 2' அல்லது கமல்ஹாசனை வைத்து 'இந்தியன் 2' படங்களில் ஏதோவொன்றைக் கையில் எடுக்கலாம் எனக் கருதப்பட்டது.

இந்நிலையில், ஷங்கர் 'இந்தியன் 2' எடுக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்ப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அஜித் படம் இல்லை :

அஜித் படம் இல்லை :

‘அஜித் ஒரு சர்ஜரி முடிந்து தற்போது முழு ஓய்வில் இருக்கிறார் என்பதாலும் இயக்குநர் ஷங்கர் 2.O படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருப்பதாலும் இருவரும் சந்திக்க வாய்ய்பில்லை எனக் கூறப்பட்டது.

விக்ரம் படமா? :

விக்ரம் படமா? :

ஷங்கர் தனது அடுத்த படத்தில் விக்ரமை நடிக்க வைப்பார் என்றும் அது அநேகமாக 'அந்நியன் -2' படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. 'அந்நியன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல வருடங்களாகவே பார்ட் 2 எடுக்கப்படுமா எனும் கேள்வியும் உலவி வருகிறது.

இந்தியன் -2 :

இந்தியன் -2 :

'2.0' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கவிருப்பது அஜித் நடிக்கும் படத்தையோ, விக்ரம் படத்தையோ அல்ல, கமல்ஹாசனை வைத்து 'இந்தியன்-2' படத்தைத்தான் இயக்கப் போகிறார் என்ற ஒரு தகவலும் முன்பே வெளியானது.

இந்தியன் :

இந்தியன் :

இயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் முதன் முதலாக இணைந்த 'இந்தியன்' படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாக ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது ட்ரெண்டாக உள்ளது. இந்நிலையில் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஷங்கர் ரெடியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியன் சேனாபதி :

இந்தியன் சேனாபதி :

1996-ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படத்தில் கமல் இரு வேடங்களில் நடித்தார். சேனாபதி கேரக்டரில் நடித்த கமல், ஊழலுக்கு எதிராகப் போராடி, ஊழல்வாதிகளை வதம் செய்வதோடு, லஞ்சம் வாங்கும் தனது மகன் சந்திர போஸையும் கொல்வார். இருபது வருடங்கள் கழித்து உருவாகவிருக்கும் இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.

என்ன கதையாக இருக்கும் :

என்ன கதையாக இருக்கும் :

இந்தியன் படத்தில் 70 வயது இந்தியன் தாத்தாவாக, லஞ்சம், ஊழலை ஒழிக்கத் துடைப்பத்தைக் கையில் எடுத்த கமல் இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை. சமீபகாலமாக ஊழல் ஆட்சிக்கு எதிராகக் கடுமையாகப் பொங்கிவரும் கமல் இந்தப் படத்திலும் அதைத் தொடர்வார் எனத் தெரிகிறது.

தொடர்ச்சியாக இருக்குமா? :

தொடர்ச்சியாக இருக்குமா? :

'இந்தியன் 2' படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகவிருக்கிறதாம். 'இந்தியன் 2' படத்தின் கதை 'இந்தியன்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகுமா அல்லது சமகால அரசியலுக்கு ஏற்ப கதையில் மாற்றம் இருக்குமா என்பது குறித்தெல்லாம் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X