20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஜோடி... யாருங்க அது?

சென்னை : இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் மணிரத்னம் தயாரித்திருந்த படம் 5 ஸ்டார்.

முழுக்க முழுக்க இளம் நடிகர்களை கொண்டு உருவான இந்தப் படம் கடந்த 2002ல் வெளியானது.

தற்போது இந்தப் படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

5 ஸ்டார் படம்

5 ஸ்டார் படம்

இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் மணிரத்னம் தயாரித்திருந்த படம் 5 ஸ்டார். இந்தப் படம் கடந்த 2002ல் வெளியானனது. படத்தில் நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை கனிகா அறிமுக நடிகர்களாக களமிறங்கியிருந்தனர். படத்தின் இவர்களுடன் சந்தியா, கிருஷ்ணா , கார்த்திக், விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நண்பர்களின் கதை

நண்பர்களின் கதை

ஐந்து நண்பர்களை சுற்றி இந்தப் படத்தின் கதைக்களம் இருந்தது. இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றது. படத்திற்கு பாடகி அனுராதா ஸ்ரீராம் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் இசையமைத்திருந்தனர். தொடர்ந்து கோலிவுட்டில் கனிகா சில படங்களில் நடித்தார். நடிகர் பிரசன்னா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு

20 ஆண்டுகளுக்கு பிறகு

விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் பிரசன்னா நடித்திருந்தார். அந்தப் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரசன்னா -கனிகா ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர்.

ஆஹா ஓடிடியின் புதிய தொடர்

ஆஹா ஓடிடியின் புதிய தொடர்

ஆஹா ஓடிடி தளத்தின் புதிய இணைய தொடரில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். இயக்குநர் பாலாஜி மோகனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விக்னேஷ் விஜயகுமார் இந்த தொடரை இயக்கவுள்ளார். இதுகுறித்து நடிகை கனிகா தற்போது சமூக வலைதள பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஒரு முழு சுழற்சி

ஒரு முழு சுழற்சி

கடந்த 2002ல் சுசி கணேசனின் பைவ் ஸ்டார் படத்தில் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியதாகவும் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன்னுடைய முதல் திரை ஜோடியான பிரசன்னாவுடன் மீண்டும் இணைவதாகவும் அவர் கூறியுள்ளார். இது ஒரு முழு சுழற்சி போல இருப்பதாகவும் பிரசன்னாவுடன் பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்ந்த நடிப்பு

தேர்ந்த நடிப்பு

முதல் படத்தில் பிரசன்னா மற்றும் கனிகாவின் ஜோடிப் பொருத்தம் பேசப்பட்டது. இருவருமே இளம் வயதில் 5 ஸ்டார் படத்தில் அறிமுகமானார்கள். தற்போது இவர்கள் இருவருமே பல படங்களில் நடித்து தேர்ந்த நடிகர்களாகியுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் இவர்களின் நடிப்பு பேசப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X