twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    23 வருஷமாச்சு... இப்ப தான் தோணுச்சு...செல்வராகவனின் புதிய அவதாரம்

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் முக்கியமான டைரக்டர்களில் ஒருவர் செல்வராகவன். 2003ம் ஆண்டு வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதற்கு முன்பாக அவருடைய அப்பா கஸ்தூரிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.

    Recommended Video

    சென்னை: இன்று முதல் செல்வராகவன் ஹீரோ: சாணி காயிதம் படப்பிடிப்பு தொடக்கம்!

    After 23 years as director Selvaraghavan begins this today

    காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக இருந்து வருகிறார். அடுத்தபடியாக தனுசை வைத்து நானே வருவேன் படத்தை இயக்க உள்ளார்.

    தற்போது 'சாணி காயிதம்' படத்தின் மூலம் நடிகராகவும் மாறியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்வதாக செல்வராகவன் டுவீட் செய்திருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'சாணி காயிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

    செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "23 வருடங்களாக திரைப்பட உருவாக்கத்தில்....இன்று முதல் ஒரு நடிகராகவும்...என் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன், அவர்கள்தான் என்னை உருவாக்கியவர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன் தனது போட்டோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். செல்வராகவன் தற்போது சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார்.

    English summary
    Selvaraghavan making debut as an actor with Arun Matheswaran's Saani Kaayidham
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X